பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நெல்லை மாவட்டம் பத்தமடை மற்றும் ஏர்வாடியில் வருடம் தோறும் ரம்ஜான் பெருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றன.இவ்வருடம் பத்தமடையில்
கைப்பந்து மற்றும் சிலம்பாட்டம் போட்டி சிறப்புடன் நடை பெற்றது .
இதில் பத்தமடை நகர தலைவர் T.K.அசன் காதர் தலைமை தாங்கினார்.பத்தமடையில் கடந்த வருடம் (2010) கைப்பந்து போட்டியில் மாவீரர் திப்பு சுல்தான் அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டி சென்றது.அதே போல் இந்த வருடமும் மாவீரர் திப்புசுல்தான் அணியும் அல் அமீன் அணியும் இறுதி சுற்றில் களம் இறங்கியது .கைப்பந்து மற்றும் சிலம்பாட்டம் போட்டி சிறப்புடன் நடை பெற்றது .
அல் அமீன் அணியின் அதிரடி ஆட்ட நாயகன் பீர் மைதின் சிறப்பான விளையாட்டால் வெற்றி கோப்பையை அல் அமீன் அணி தட்டி சென்றது. இந்த அணியின் கேப்டன் A.K.மீராப்பிள்ளை அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நெல்லை மாவட்ட செயலாளர் மௌலவி A.ஹைதர் அலி மழாஹிரி அவர்கள் பரிசு வழங்கினார்கள்.
இதை தொடர்ந்து சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது. இப்போட்டிற்கு நடுவர்களாக பத்தமடை சிலம்பு மாஸ்டர்கள் அவுலிய நன்னா அவர்களும் புலவர் நன்னா அவர்களும் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பாக விளையாடிய அல் பஸிர் அணியின் சிலம்பாட்ட வீரர் ஷேக் மைதின் முதல் பரிசை பெற்று பத்தமடை சிலம்பு CHAMPION என்ற பட்டத்தையும் தட்டி சென்றார்.
இந் நிகழ்ச்சியில் SDPI முன்னால் நெல்லை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாசிம்,பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் P.அப்துல் கனி,பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் மௌலவி A.ஹைதர் அலி ,
சகோ K.பால் முகைதின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சகோ K.பால் முகைதின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை பொதுமக்கள் பெருமனதோடு வாழ்த்தி,நமக்காக துவா செய்தனர்.ஆண்களும்,பெண்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.