டெல்லி : கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.
எந்த ஒரு மதமும் அப்பாவிகளை கொலைச் செய்ய கூறுவதில்லை என்று கூறியுள்ள அப்சல், இதில் என் பெயரை சமந்தப்படுத்துவது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது என் பெயரை கலங்கப்படுத்தவும், அரசியல் லாபதிற்கும் செய்யப்படுவதாக தன் வக்கீல் என்.டி.பஞ்சொளி மூலம் விடுத்துள்ள அறிக்கையில் அப்சல் கூறியுள்ளார்.
முன்னதாக, ஹுஜி அமைப்பின் பெயரில் வந்த இமெயிலில் அப்சலை விடுவிக்கும் முகமாக டெல்லி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.