நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

செல்போனில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க நடவடிக்கை



இந்தியாவில் தற்போது 85 கோடிக்கும் அதிகமான செல்போன் உபயோகிப்பாளர்களும், சுமார் 31/2 கோடி தொலைபேசி உபயோகிப்பாளர்களும் உள்ளனர். அவர்களுக்கு அடிக்கடி தேவையில்லாத அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வந்து தொல்லை கொடுப்பதாக புகார்கள் வந்தன.
அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்தி, உபயோகிப்பாளர்களை சிரமத்தில் இருந்து மீட்க மத்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.21/2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க பொதுமக்கள் `தேவையில்லாத அழைப்பு பதிவில்' (டு நாட் கால் ரெஜிஸ்ட்ரரி) பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால், பொதுமக்களால் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்துவதில் சிரமம் இருந்தது.




இப்போது புதிய முறையை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முன்பு `தேவையில்லாத அழைப்பு பதிவு' என்ற அமைப்பு தற்போது `தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு' என்று மாற்றப்பட்டு உள்ளது.

தேவையில்லாத அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், இனிமேல் புதிய அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த அமைப்பு வருகிற 27-ந் தேதி முதல் செயல்படும். இந்த அமைப்பு சில விதிமுறைகளை வகுத்து உள்ளது.

புதிய முறைப்படி தொலைபேசி இலாகா 140 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது. விற்பனையை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு இந்த எண்ணை செல்போன் நிறுவனங்கள் அளிக்கும். அவற்றை பயன்படுத்தியே இனிமேல் விற்பனை நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை மார்க்கெட்டிங் செய்யும். தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு மையத்தில் பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு 140 என்ற எண்ணை செல் நிறுவனங்கள் அளிக்க முடியாது. இதன் மூலம் தேவையில்லாத அழைப்புகள் தவிர்க்கப்படும்.