நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

ஜப்பானை தாக்கிய தாலஸ் புயலுக்கு 32 பேர் பலி, 57 பேர் மாயம்

டோக்கியோ: ஜப்பானை தாக்கிய தாலஸ் புயலால், நிலசரிபு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இதுவரை 32 பலியாகியுள்ளனர். 57 பேரை காணவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிக்கிறது.

ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களால், அந்நாட்டு மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய தாலஸ் என்ற பலத்த புயலால், ஜப்பானின் தென் பகுதியில் உள்ள கரையை கடந்தது. ஆனால், அதன்பின்னும் 20 கி.மீ., வேகத்தில் வீசியதால், பலத்த மழைப் பொழிவை ஏற்படுத்தியது.


இதனால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், நாட்டின் சில தீவுப்பகுதிகளில், நிலத்தடி நீர் உயர்ந்து நிலப்பகுதிகள் சரிந்தன. 2 நாட்களாக தொடரும் இந்த இயற்கை சீற்றத்தால், மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

புயலில் பாலங்கள், மின்வசதி, சாலைகள் பாதிக்கப்பட்டு, ஆங்காங்கே நிலசரிவும் ஏற்படுவதால், மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது.

நாட்டின் மத்திய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வகாயம் என்ற இடத்தில் 3 வீடுகள் மண்சரிவில் சிக்கி புதைத்துவிட்டது. இதுபோன்ற புயல் கடந்து 7 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஏற்பட்டுள்ளதாக செய்துகள் தெரிவிக்கின்றன.

போலீஸ், தீயணைப்பு படையினர், சுய பாதுகாப்பு படையினர் என பலதரப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். 4,702 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளியன்று பதவியேற்ற பிரதமர் யோஷிஹிகோ நோடா கூறுகையில், இயற்கை சீற்றத்தில் காணாமல் போன மக்களை கண்டுபிடிக்கவும், சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றவும் நாங்கள் எதுவும் தயாராக உள்ளோம், என்றார்.

இந்நிலையில், கின்கி மற்றும் நாட்டின் கிழக்கு பகுதிகளில் நிலசரிவிற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாலஸ் என்பதற்கு 'கூர்மையான' எனப் பொருள்.