நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உடலெனும் பிரபஞ்சம் பித்த நீரே... சக்தி நீர்...

                பித்த நீரானது மனிதனின் எண்ணங்களை நல்வழிப்படுத்தி சிந்தனைகளை சீராக்கி வாழ்வின் உயர் நிலையை அடைய பல்வேறு வகையில் உதவுகிறது.

பித்தத்தை சீர்படுத்தினாலே மனிதன் நோயில்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம் என்பதை சித்தர்கள்  அன்றே கூறிச் சென்றனர், தற்கால இந்திய முறை மருத்துவர்களும் கூறி வருகின்றனர்.
பித்தமே மனிதனை செயல்படவைக்கும் உயிர்சக்தியாகும். ஆனால் இதுவே அதிகரித்தால் அது அழிக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.  பித்தமானது கல்லீரலின் செயல்பாட்டினைப் பொறுத்து சுரந்து பித்தப்பையில் சேர்கிறது.  உடற்கூறுகளுக்குத் தகுந்த வாறு அவற்றின் செயல் பாடுகள் அமைகின்றன.  ஒருவர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தால் பித்தம் அதிகரித்து மறுநாள் காலையில் பித்த செயல் நரம்புகள் நிதானம் இழந்து, கிறுகிறுப்பு, மயக்கம், தலைச்சுற்றல்,  எந்த ஒரு செயலையும் செய்ய இயலாமை, மனச்சோர்வு, உடல் சோர்வு போன்ற வற்றை ஏற்படுத்தும்.


இதுபோல் பித்த செயல்பாடுகுறைந்து விட்டால் உடலின் இயக்கம் பாதிப்படையும்.  பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள்ஒரு செயலற்ற நிலையில் தன்னிலை மறந்து இருப்பதற்கு பித்தமே முக்கியக் காரணமாகும்.  உயிர் இருக்கும் ஆனால் உடல் இயங்காது.  பேச முடியாது.  கை கால் அசையாது என்ற நிலைக்கு காரணம் பித்தமே.  இதைத்தான்  அகத்தியர் பித்தம் பிசகிடில் பேதமை வந்திடும் என்று கூறுகிறார்.  இங்கே பேதமை என்பது தன்நிலை மறந்து,  அசைவற்று உயிரோடு இருப்பதுதான்.

பித்தத்தை  அகத்தியர் மாய நீர் என்றே அழைக்கிறார்.  சாஸ்திரங்கள் பித்தத்தை மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவாக கூறுகின்றன.  உடலுக்குத் தேவையான உயிர் சக்தியை அளிக்கக் கூடியதும், உடல் இயங்க உஷ்ணத்தைக் கொடுப்பதும் பித்தம்தான்.  இதனால்தான் பித்தத்தை தீ என்கின்றனர்.  பித்தம்தான் உடலை புறச்சூழ்நிலைக்குத் தகுந்தவாறு உஷ்ணத்தைக் கொடுத்து இயங்க வைக்கிறது.

உணவை எரித்து சக்தியை உடலுக்குக் கொடுக்கிறது.

பித்தமானது நீராகவும், ஆவியாகவும் மாறும் குணம் கொண்டது.  இந்த பித்தத்தை சாதாரண மனிதனால் கட்டுப்படுத்த முடியாது.  ஆனால் சித்தர்கள் முதல் மகான்கள் வரை பித்தத்தை கட்டுப் படுத்தியே வந்தனர். நிலையற்ற பித்தத்தை நிலைப் படுத்தினால் அவனே யோகியாகவும், ஞானியாகவும் திகழ முடியும்.

பித்தமானது மன எண்ணங்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும் தன்மை கொண்டது என கடந்த இதழ்களில் பார்த்தோம்.  பித்த நீர் மாறுபட்டால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கலாம்.

பித்தம் பேதலித்துவிட்டது அதனால்தான் இவன் தேவையில்லாமல் பேசுகிறான் என்று கிராமங்களில் சிலர் சொல்வார்கள்.  இது முற்றிலும் உண்மை.  

பித்தம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ ஞாபக சக்தியை இழக்க வைக்கும். பித்தமானது சீராக இருந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும்

மனதையும் உடலையும் இயக்கி வைக்கிற ஒரே சக்தி நீர் பித்த நீர்தான்.  உடலின் அங்க அவையங்க ளுக்கும், உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை ஊட்டுவதும் பித்த நீர்தான்.  

இந்த நிலை மாறும் போது சித்த பிரமை ஏற்படுகிறது.  சித்த பிரமை என்பது மன நோய்தான்.  பித்த அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி வரும் இதழில் அறிவோம்.