நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வருகிறது உள்ளாட்சித் தேர்தல் திருவிழா-பணிகள் தொடங்கின-10 நாளில் தேதி தெரியும்


சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் திருவிழாவைத் தொடர்ந்து அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பெருவிழா வரவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய பத்து மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இவற்றில், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என மொத்தம் 14,379 பேரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

இவை தவிர 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. இவற்றில் உள்ளன. இவற்றில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என 1,17,716 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை தள்ளிப் போட முடியாது என்பதால் குறித்த காலத்தில் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

செப்டம்பர் 14ம் தேதிக்குப் பின்னர் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தத் தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். 
வருகிற தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெறும். பல்வேறு நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் இந்த மாற்றம். அதேபோல மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர், ஈரோடு, நெல்லை ஆகிய மாநகராட்சிகளிலும் வரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும். 
சேலம் மற்றும் தூத்துக்குடிக்கு மட்டும் பழைய வார்டுகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகளிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக என முக்கியக் கட்சிகள் அனைத்தும் இப்போதே தங்களது கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.