ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் சித்திபேட் என்கின்ற ஊரில் சில கயவர்களால் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலை கண்டிக்கும் விதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் இளைஞர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்துள்ளனர். இது தொடர்பாக உடனே நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில அரசை வலியுறுத்துகிறது.
NOV 2013
வியாழன், 13 அக்டோபர், 2011
புதன், 12 அக்டோபர், 2011
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுக்குழுக்கூட்டம்
சமீபத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுக்குழுக்கூட்டம் திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெங்களூரைச்சேர்ந்த மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி அவர்கள் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மஹாராஷ்டிராவைச்சேர்ந்த மெளலானா ஷாஹித் கோத் அவர்கள் பொதுச்செயலாளராகவும், கேரளாவைச்சேர்ந்த மெளலவி முஹம்மது ஈஸா மன்பஈ அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி
புதுடெல்லி : மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.
சென்னையில் நடந்த தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவிருக்கும் மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
டெல்லி குண்டுவெடிப்பு: சங்க்பரிவார தொடர்புடைய கேரளாவைச் சார்ந்தவர் கைது
கொச்சி : டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபரான கேரளாவைச் சார்ந்த டி.எஸ்.பாலன்(வயது 55) என்பவரை தேசிய புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.
பாலன் வளையல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். டெல்லி குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தவர் இவர் என கருதப்படுகிறது.
அத்வானியின் ரத யாத்திரை அரசியல் கேலிக்கூத்து: இ.அபூபக்கர்
புதுடெல்லி : பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி துவங்கியுள்ள ஊழலுக்கு எதிரான ரதயாத்திரை அரசியல் கேலிக்கூத்து என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது; ‘அரசியலில் புகழ்மங்கிய தனக்கும், தனது கட்சிக்காகவும் புதிய அதிர்ஷட சோதனைக்கு தயாராகியிருக்கிறார் அத்வானி. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கவே அத்வானி நடத்தும் யாத்திரை கண்டிக்கத்தக்கதாகும்.
ஹஸாரேக்கு திக்விஜய் சிங்கின் மனம் திறந்த மடல்
புதுடெல்லி : ஹரியானா மாநிலம் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஹஸாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டின் மோசடியை வெளிச்சம்போட்டு காட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அன்னா ஹஸாரேக்கு மனம் திறந்த மடலை எழுதியுள்ளார்.
வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதியில் ஹஸாரே குழுவினர் ஆதரிப்பது ஊழல்வாதிகளைத்தான் என திக்விஜய்சிங் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
செவ்வாய், 11 அக்டோபர், 2011
NWF மாநில பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாநில பொதுக்குழு 09.10.2011 அன்று தேனியில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு NWF-ன் மாநில துணைத்தலைவர் ஃபாத்திமா ஆலிமா அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதன் பிறகு மாநில பொதுச் செயலாளர் ஷிபா அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
திங்கள், 10 அக்டோபர், 2011
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறப்பு!
ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அடக்குமுறைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த வலிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் "சமூக நீதி மாநாட்டை" நடத்த தீர்மானித்துள்ளது.
அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் தர்ணா: எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு
புதுடெல்லி:அரசு பயங்கரவாதம் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை மெளனிகளாக மாற்ற நினைக்கும் போலீஸ் அடக்குமுறையை கண்டித்தும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டத்தை நடத்தவிருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் இதுத்தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.
ஆதாரமில்லாமல் பொய் குற்றச்சாட்டுகளை பரப்பும் உளவு நிறுவனங்களை கலைக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
இருபது வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட்க்கு எதிராக எவ்வித தெளிவான ஆதாரமும் இல்லாமல் தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வரும் அரசு உளவு நிறுவனங்களை கலைத்து விட வேண்டும் என்று கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொது செயலாளர் ஜனாப் அப்துல் ஹமீது “சுதந்திரம் நமது பிறப்புரிமை” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியின் போது தனது உரையில் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)