நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 12 அக்டோபர், 2011

டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது

கொச்சி : டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபரான கேரளாவைச் சார்ந்த டி.எஸ்.பாலன்(வயது 55) என்பவரை தேசிய புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.imagesCAE335VJ
பாலன் வளையல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். டெல்லி குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தவர் இவர் என கருதப்படுகிறது.


கேரள மாநிலம் கொச்சியில் என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து விரிவான விசாரணைக்கு பிறகு இவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 6 நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்க்பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய பாலனை என்.ஐ.ஏ புலனாய்வு குழுவினர் மேலும் விசாரித்து வருகின்றனர்