நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 25 பிப்ரவரி, 2012

மேட்டுபாளையம் கரட்டுமேடு பகுதில்.....

கோவை - மேட்டுபாளையம் கரட்டுமேடு பகுதில் பெண்ணை மானபங்கம் படுத்திய நபரை கைது செய்ய தாமதித்த போலிசை கண்டித்து 12.02.2012 மாலை 5 .30  அளவில்  மேட்டுபாளையம் பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேடர்கள் மற்றும் பொதுமக்கள் (பெண்கள் உட்பட) 250.சாலை மறியலில் போராட்டதில் ஈடுபட்டனர். 
  இந்த  மறியல் போராட்டதை  தொடர்ந்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க-முஸ்லிம் லீக் கூட்டணி!


நாக்பூர் : ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.கவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கும் கூட்டணி வைத்துள்ளன. நாக்பூர் மாநகராட்சியில் இந்த விசித்திரமான முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கையாக முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள் ஹிந்துத்துவா அரசியல் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
imagesCALXG0EU
இதனால் 145 உறுப்பினர்களை கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் 62 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் லீக்கின் இஷ்ரத் அன்ஸாரி, அஸ்லம் கான் ஆகியோர் சங்க்பரிவாரின் அரசியல் கட்சியுடன் மாநகராட்சி ஆட்சியில் பங்காளிகளாக மாறியுள்ளனர்.

சங்கரன் கோவில் இடை தேர்தல் SDPI ஆதரவு யாருக்கு?

சங்கரன் கோவில் இடைதேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கடத்த (19.02.12)மதியம் 1 மணியளவில் சங்கரன்கோவில் அசெம்ப்ளி LODGE இல் வைத்து நடைபெற்றது .
இக்கூட்டத்தில் வரக்கூடிய இடைதேர்தலில் தனித்து போட்டியா ? அல்லது பிற கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுமா என்று விவாதிக்கப்பட்டது . 



பழங்களின் மருத்துவ பண்புகள்


1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.
2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

மின்வெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ யினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை :  சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின்   தென் சென்னை மாவட்டம் சார்பாக தமிழகம் முழுவதும் ஏற்படும் மின்வெட்டை கண்டித்து ஆர்பாட்டம் 16.02.12 அன்று மாலை 4 மணி அளவில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில்  மாவட்ட தலைவர்   முஹம்மது ஹுசைன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.   மாவட்ட  செயலாளர் அஹமது அலி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அஹமது ரிபாய், மாவட்ட செயலாளர்கள் சாகுல் ஹமீது, அனீஸ் முஹம்மது மற்றும் தொகுதி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர்   முஹம்மது ஹுசைன் அவர்கள் தனது தலைமை உரையில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த மின்வெட்டானது மத்திய மாநில அரசுகள் மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மனதில் கொண்டு செய்யப்படும் உள்நோக்கம் கொண்ட  ஒரு செயல் என்றும், தமிழ் மாநிலத்திற்கு தேவையான மின் பற்றாக்குறையை காற்றாலை, சூரிய மின் சக்தி போன்ற மாற்று திட்டங்கள் மூலம் சரி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இந்த மின்வெட்டை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


வியாழன், 23 பிப்ரவரி, 2012

குஜராத்திற்கு கலவரம் புதிதல்ல என்று முஸ்லிம் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் மோடி!


அஹ்மதாபாத் : குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 
modi
கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சிறப்பு விசாரணக் குழுவிடம் கூறியுள்ளதாக எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து சில ஊடகங்களில் வெளியிட்டுள்ளன.

சென்னை என்கவுண்டர்: மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்!


சென்னை:- சென்னையில் ஐந்து வங்கிக் கொள்ளையர்கள் போலீஸ் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
robbery1
சென்னையில் 2 வங்கிககளில் பல லட்சம் பணத்தைத் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக கூறப்படும் வினோத்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று அதிகாலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து என்கவுண்டர் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குமரிமுனைக்கு அருகில் ஒன்றுதிரண்ட சங்க சக்தி.


சுவாமி விவேகானந்தர் அவர்கள் 110௦ ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிக் கடலில் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் இருந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் சிகாகோ மாநாடு செல்வதற்குத் தீர்மானித்தார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று 150௦ ஆவது பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜியின் 150௦ ஆவது பிறந்த ஆண்டினை நாட்டிலுள்ள அனைத்து தேசபக்தர்கள், ஆன்மீகவாதிகள், துறவியர்கள், பல வகையில் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் கூட சுவாமிஜியின் 150௦ வருடத்தினைக் கொண்டாடத் துவங்கியுள்ளன.


பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நடத்திய "ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான தேசம்" தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்..


பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நடத்திய "ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான தேசம்" தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்...தமிழ்நாடு அணைத்து மாவட்டகளில் நடந்த நிகழ்ச்சி ஒரு தொகுப்பு .... 

சென்னையில் மிகப்பெரிய என்கவுண்டர்​: முன்னாள் கல்லூரி மாணவன் உள்பட 5 பேர் பலி


சென்னை : சென்னை மாநகரில் நடந்த வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து இளைஞர்கள் போலீஸாரின் என்கவுண்டரில் பலியானார்கள். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
IN23_BANK_932426f
சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவன் உள்பட ஐந்துபேர் என்கவுண்டரில் பலியானார்கள். மோதலில் காயமடைந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரு போலீஸ் என்கவுண்டரில் அதிகமான நபர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

புதன், 22 பிப்ரவரி, 2012

சம உரிமை பெற்றிட ....!!! முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....!!!


முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு மத்தியில் 10 % மாநிலத்தில் 7  % 
வேண்டும் என்ற முழக்கத்துடன்  
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை , மதுரை, சென்னை, தஞ்சாவூர், நெல்லை, ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 22 ,2012
மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது....

சம உரிமை பெற்றிட ... முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....
என அழைக்கிறது......

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம்
                    
(இன்னும் சில தினங்களே உள்ளன)


வேண்டும் ஓர் அடையாள அட்டை!

அடையாள அட்டை விஷயத்தில் அசிரத்தையாய் இருக்க வேண்டாம்!!!
பெண்களுக்கு எங்கே போனாலும் பிரச்னைதான். வங்கிக்குச் சென்று ஒரு கணக்கு தொடங்கப்போனால்கூட. குருக்கள்பட்டி குருவம்மாள், பிரசவத்துக்குத் தயாராக இருக்கும் தனது மகள் பெயரில் ஒரு கணக்குத் தொடங்க வந்த இடத்தில்தான் இப்படியொரு சோதனை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குருவம்மாளுக்கு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைத்ததால் வங்கியில் கணக்குத் தொடங்கச் சொன்னபோதும் இப்படித்தான் பிரச்னை ஏற்பட்டது. 



வபாத் அறிவிப்பு


பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியாவின் தமிழக மாநில தலைவர் ஏ எஸ் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் சகோதரர் சகாபுதீன் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார்

பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியாவின் தமிழக மாநில தலைவர் ஏ எஸ் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் சகோதரர் சகாபுதீன் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார் . அவரின் ஜனாஸா பிப்ரவரி 22 தேதி காலை பத்து மணியளவில் கோயம்புத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது அவரின் மறுமை வாழ்வு வெற்றி பெறவும் ,மேலும் அவர் செய்த பாவங்களை அல்லா மன்னித்தருள அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக

டெட்டனேட்டர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது – சாட்சி வாக்குமூலம்


புதுடெல்லி : சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் டெட்டனேட்டர் ஜார்கண்ட் மாநிலம் மிஹிஜாமில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தான் கண்டதாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Samjhauta,
தும்காவைச் சார்ந்த ரோஹித் ஜா என்பவர் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) யிடம் அளித்த வாக்குமூலத்தில், தேவேந்திர குப்தாவும், ராம்ஜி கல்சங்க்ராவும் இணைந்து ராஞ்சியில் இருந்து டெட்டனேட்டரை வாங்கியதாக கூறியுள்ளார். ஜாவின் வாக்குமூலத்தை என்.ஐ.ஏ பதிவுச்செய்துள்ளது.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!!



கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது.“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் மாநாடு இனிதே துவங்கியது. மாநில செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார்.பின்னர் மாநில பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2012-2013 ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகளை தேசிய செயலாளர் மெஹஃபூஸ் அறிவித்தார்.

ஹரியானாவில் ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது!


பாட்டியாலா : ஹரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.
Haryana blasts
சாகர் என்ற ஆசாத், ஷாம் நிவாஸ், குர்ணாம்சிங், ப்ரவீண் சர்மா, ராஜேஷ்குமார் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுகள், மதரசாக்கள், இறைச்சி வெட்டுமிடங்கள் ஆகிய இடங்களில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தொடர்பான வழக்குகளில் போலீஸ் கைது செய்துள்ளது.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

பழமொழியும் மருத்துவமும்...





            பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..

இந்த  பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி..

அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...?

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு.  இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது என்று தெரிந்துதான் நம்மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்து நாட்டைப் பிடித்தார்கள். 

இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு இன்னொரு ஆதாரம் - காதர்அத்னான்


ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னானின் சிறை உண்ணாவிரதம் 65 தினங்களை கடந்த வேளையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் கோரமுகமும் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
The father of Palestinian prisoner Khader Adnan holds a poster
அரசு நிர்வாக ரீதியான சிறை(Administrativedetention) என்ற பெயரால் விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீன் மக்களுக்காக தனி மனிதனாக போராடி வருகிறார் அத்னான். மருத்துவமனையின் படுக்கையில் மிகவும் ஆபத்தான நிலையில் படுத்திருக்கும் அத்னான், உலகின் மிகப்பெரிய க்ரிமினல் அரசை மண்டியிடச் செய்வாரா? என்பதை உலகம் உற்றுநோக்கி வருகிறது.

"ஈ" ...... என்னும் நோய் பரப்பி


ன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள்.  பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும்  அருவெறுப்பு தான்  தோன்றும்.  ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும்உண்ணும் உணவுகளின்  மீதும் உட்காருவது தான்.  ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே.  அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ  குறைந்த பாடில்லை.

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - வின் சார்பாக வருடந்தோறும் ( Healthy People Healthy Nation ) ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு மக்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது . 

இவ்வருடம் பிப்ரவரி 10 முதல் 20  ஆம் தேதி வரை இப்பிரச்சாரம் செய்ய தீர்மானக்கப்பட்டு இதனுடைய துவக்க விழா பிப்ரவரி 10 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது .

எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன் – திக்விஜய்சிங்


போபால் : டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது என்ற தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
பாட்லாஹவுஸ் போலி என்கவுண்டர்
ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு எதிராக மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற குற்றச்சாட்டும் தவறானது. சர்ச்சையை கிளப்ப தான் விரும்பவில்லை என்றும், ஆனால், சொந்த கருத்தை வாபஸ்பெறும் நபர் தான் அல்ல என்றும் திக்விஜய் சிங் கூறினார்.

சிரியா துறைமுகத்தில் ஈரானின் போர்க் கப்பல்கள்!


டெஹ்ரான் : ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும், மேற்கத்திய சக்திகளும் கச்சைக்கட்டி களமிறங்கியுள்ள சூழலில் இரண்டு போர்க் கப்பல்களை சிரியா துறைமுகத்திற்கு ஈரான் அனுப்பியுள்ளது. இதன் மூலம் கொள்கை ரீதியாக ஈரான் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
Iran warships 'dock in Syria's Tartous port'
சிரியாவில் தார்தூஸ் துறைமுகத்தில் இரு கப்பல்களும் நேற்று நங்கூரமிட்டதாக அல்ஜஸீரா கூறுகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலோன் இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல் அவீவிற்கு வருகை தந்துள்ள சூழலில் ஈரான் போர்க் கப்பல்களை சிரியா துறைமுகத்திற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

68 பேரை பலிவாங்கியதில் எனக்கு குற்ற உணர்வு இல்லை – ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி வாக்குமூலம்


புதுடெல்லி : சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நான்கு பேர் சேர்ந்து வெடிக்குண்டை வைத்ததாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான்
நான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டு சம்ஜோதா ரெயில் வைக்கப்பட்டது. 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு இல்லை என்று சவுகான் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.