நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 23 பிப்ரவரி, 2012

குஜராத்திற்கு கலவரம் புதிதல்ல என்று முஸ்லிம் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் மோடி!


அஹ்மதாபாத் : குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 
modi
கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சிறப்பு விசாரணக் குழுவிடம் கூறியுள்ளதாக எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து சில ஊடகங்களில் வெளியிட்டுள்ளன.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில் கரசேவகர்கள் பயணித்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் பலர் பலியாகினர்.
இதையடுத்து குஜராத்தில் முஸ்லிம்கள் கொடூரமாக . படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொடூரமாக பலர் எரித்தும், சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் குழு, சி.பி.ஐ., உச்சநீதிமன்றம் நியமித்த குழு ஆகியவை விசாரித்தன. இதில், குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட 10 கலவர வழக்குகளை விசாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்தது. இந்தக்குழு முதல்வர் மோடியிடம் விசாரணை நடத்தியது.
நரேந்திரமோடி, 2010 மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, எஸ்ஐடி அதிகாரி ஏ.கே.மல்கோத்ரா எழுப்பிய 71 கேள்விகளுக்கும், நரேந்திரமோடி  பதில் அளித்தார்.
இந்த நிலையில் இம்மாதம் 14-ந்தேதி சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த அறிக்கையின் விவரங்கள், அதாவது மோடி அளித்த வாக்குமூலம் குறித்தத் தகவல்கள் கசிந்துள்ளன.
மோடி எஸ்.ஐ.டி விசாரணையின் போது கூறிருப்பதாவது:
குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன், எனது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் துணை கமிஷனரான (புலனாய்வு) சஞ்சீவ்பட் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில் நடந்தது உயர்மட்டக்குழு கூட்டம் என்பதால், ஜூனியர் அதிகாரியான சஞ்சீவ்பட் அழைக்கப்படவில்லை என்று மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.