நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 20 பிப்ரவரி, 2012

சிரியா துறைமுகத்தில் ஈரானின் போர்க் கப்பல்கள்!


டெஹ்ரான் : ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும், மேற்கத்திய சக்திகளும் கச்சைக்கட்டி களமிறங்கியுள்ள சூழலில் இரண்டு போர்க் கப்பல்களை சிரியா துறைமுகத்திற்கு ஈரான் அனுப்பியுள்ளது. இதன் மூலம் கொள்கை ரீதியாக ஈரான் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
Iran warships 'dock in Syria's Tartous port'
சிரியாவில் தார்தூஸ் துறைமுகத்தில் இரு கப்பல்களும் நேற்று நங்கூரமிட்டதாக அல்ஜஸீரா கூறுகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலோன் இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல் அவீவிற்கு வருகை தந்துள்ள சூழலில் ஈரான் போர்க் கப்பல்களை சிரியா துறைமுகத்திற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இரண்டு செய்திகளை ஈரான் அளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகள் கடுமையாக விமர்சித்துவரும் சிரியாவுடன் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துதல், ஈரானின் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தினால் சிரியாவை தளமாக்கி எதிர்தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் என்ற முன்னெச்சரிக்கையையும் புதிய நடவடிக்கையின் மூலமாக ஈரான் அளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எண்ணெய் தடையை தீவிரப்படுத்தினால் ஹோர்முஸ் ஜலசந்தியின் வழியாக நடைபெறும் இதர நாடுகளின் வர்த்தக போக்குவரத்தை தடுப்பதும் இந்நடவடிக்கையின் நோக்கமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த 2011 பிப்ரவரி மாதமும் இத்தகையதொரு நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டது.
ஈரானின் நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்துவதாகும் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.