NOV 2013
வியாழன், 26 ஏப்ரல், 2012
ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!
புதுடெல்லி:ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று அறிக்கை கூறுகிறது.
புதுடெல்லியில் இஸ்ரேலை கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி
புதுடெல்லி: உலக பயங்கரவாத நாடான இஸ்ரேலுடன் எவ்வித உறவையும் ஏற்படுத்தக்கூடாது என்றும், இதுவரை அந்நாட்டோடு இருக்கின்ற எல்லா உறவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் இயக்கங்கள் பல ஒன்றினைந்து இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணியை நடத்தியது. பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்!
விடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்!
உலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை "விடியல் வெள்ளி" மாத இதழ் பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. சிறிய வடிவிலான ஏடாக தொடங்கப்பட்ட இந்த இதழ் இறைவனின் கிருபையால் தற்போது மாதந்தோரும் 25,000ற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு வருகிறது.
தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களின் அட்டூழியங்களை முதன் முதலில் சமூகத்திற்கு எடுத்துறைத்த பெருமை விடியல் வெள்ளியையே சாரும். தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கம் பெயர் இல்லாமல் செயல்பட்ட அன்றைய காலத்தில் மக்கள் இப்பத்திரிக்கையின் பெயரைக் கொண்டே அழைத்து வந்தனர். ஏன் இன்றும் கூட பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை "விடியல் குரூப்" என்றே சில இடங்களில் அழைத்து வருவதை காண முடிகிறது.
புதன், 25 ஏப்ரல், 2012
இஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி
புதுடெல்லி: உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக திகழ்கின்ற இஸ்ரேல் ஃபலஸ்தீன் நாட்டின் பிஞ்சு குழந்தைகளை கொன்று வருகிறது, ஃபலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடித்து வருகிறது. இறையாண்மையோடு செயல்படுகின்ற பிற நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டி வருகிறது. இஸ்ரேலிய உளவுத்துறையினர் நமது நாட்டிற்குள் ஊடுறுவி ஃபாசிஸ சக்திகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு
சங்கப்பரிவார கும்பல்களின் மாணவர் பிரிவான "அகில பாரதிய வித்யார்த் பரிஷத்" ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் டாக்டர் செய்யது பரகத்துல்லாஹ் குற்றஞ்சாட்டியுள்ளார். சங்கப்பரிவார்களின் தீர்மானங்களை ஏ.பி.வி.பி செயல்படுத்தி வருவதாகவும், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவி வரும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்ச்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைகழகத்தில் "பீஃப் ஃபெஸ்டிவல்" (மாட்டிறைச்சி உண்ணும்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜாதி, மத பாகுபாடின்றி பெரும்பாலான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மதச்சாயம் பூசி முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த முயன்று, தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இவ்வாறு செய்யது பரகத்துல்லாஹ் தெரிவித்தார்.
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: ஆன்லைன் மூலம் இலவசப் படிப்பு!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி அறிந்துகொள்ள ஆன்லைன் மூலம் இலவசப் படிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
இந்திய
ஜனநாயக முறைப்படி அரசுத்துறை அலுவலகங்களில் மக்கள் தங்களுக்கு வேண்டிய
தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த
2005ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது அனைவரும் அறிந்ததே. தகவல் அறியும்
உரிமைச் சட்டம் பற்றி பரவலாக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் விழிப்புணர்வு
இருப்பினும் அதை செயல்படுத்தும்போது ஏற்படும் சந்தேகங்களைப் போக்க
வழக்கறிஞர் அல்லது எவரேனும் ஒருவரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதைக்
கருத்தில் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களிடையே
பிரபலப்படுத்தும் நோக்கில் 15 நாள் ஆன்லைன் சர்டிஃபிகேட் படிப்பை மத்திய
அரசு நடத்திவருகிறது.இது ஆங்கில மொழியில் நடைபெறும்.
தமிழன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான பாப்புலர் ஃப்ரண்டின் போராட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தமிழக முழுவதும் ஐந்து மண்டலங்களில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டினை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டம் தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானது. சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற போராட்டக்காட்சிகள் "தமிழன்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.
மக்கா மஸ்ஜிதை வந்தடைந்த யாத்திரை
ஹைதராபாத்: கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லி பட்லா ஹவுஸில் வைத்து தொடங்கிய விழிப்புணர்வு யாத்திரை 5000 கி.மீ கடந்து ஏப்ரல் 21 அன்று ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வந்தடைந்தது. முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த யாத்திரை திட்டமிட்ட படி சிறப்பாக செயல்பட்டு தனது பணியை நிறைவு செய்துள்ளது.
இந்த யாத்திரையில், டெல்லியைச் சேர்ந்த ஃபைசல் கான், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பல்வந்த் சிங் யாதவ், பாண்டிச்சேரியைச் சேர்ந்த இனாமுல் ஹஸன், குஜராத்தைச்சேர்ந்த வழக்கறிஞர் பிலால் காஜி, உத்திர பிரதேசத்தைச்சேர்ந்த முஹம்மது ஃபைஜான், கஷ்மீரைச்சேர்ந்த சபீர் ஹஸன் மற்றும் டெல்லியைச்சேர்ந்த ராஹில் இஃக்பால் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.
அவசர இரத்த தான உதவி
இறைவனின் உதவியைக் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், எஸ்.டி.பி.ஐ கட்சியும் இந்தியாவில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுகொண்டிருப்பது நாம் அறிந்ததே!
மர்மகாய்ச்சலால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடங்களில் இந்த காய்ச்சலால் 30க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி பலியாகினர். இந்த வருடமும் பல மக்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
திங்கள், 23 ஏப்ரல், 2012
ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைக்காதே!- மத்திய அரசுக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை!
லக்னோ:முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மும்பையில் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உரை நிகழ்த்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை குறித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
பி.வி.முஹம்மது படுகொலை வழக்கு – 9 ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுள்!
தலச்சேரி:கேரள மாநிலம் தலச்சேரியைச் சார்ந்த என்.டி.எஃப் உறுப்பினர் பி.வி.முஹம்மது(வயது 50) கொலை வழக்கில் ஒன்பது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி அதிகாலை ஐந்துமணி அளவில் தனது வீட்டில் இருந்து மஸ்ஜிதுக்கு ஃபஜ்ர்(அதிகாலை) தொழுகைக்காக சென்று கொண்டிருந்தார் பி.வி.முஹம்மது. அப்பொழுது அவர் சென்றுகொண்டிருந்த வழியில் வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் முஹம்மதை தடுத்து நிறுத்தி ஆயுதங்களை உபயோகித்து படுகொலைச் செய்தனர். தந்தையை காப்பாற்ற முயன்ற மகன் ஃபிரோஸ்(வயது 18) காயம் ஏற்பட்டது.
இலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம் - நூற்றுக்கணக்கானவர்கள் கைது!
இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் நின்றிருந்த காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் புத்த பிட்சுகளை தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த இனவெறி தாக்குதலால் வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் ஜும்மா பிரசங்கமும், தொழுகையும் நடைபெறவில்லை. அதற்கான தயாரிப்பில் முஸ்லிம்கள் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கண்டன உரை நிகழ்த்தும் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் |
மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த நெல்லை ... இனிமேல் செவி சாய்க்குமா மத்திய மாநில அரசுகள்?
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும், தேசிய அளவில் நீதிபஹி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த நான்கு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம், வாகனப் பேரணி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள், கண்காட்சிகள், ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது.
இந்த முஸ்லிம் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 22 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாசென்னை, தஞ்சை, கோவை, மதுரை, மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
சென்னை: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும், தேசிய அளவில் நீதிபஹி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த நான்கு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம், வாகனப் பேரணி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள், கண்காட்சிகள், ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது.
இந்த முஸ்லிம் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 22 அன்று சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அவதூறு செய்திகளை வெளியிடும் பத்திரிகை மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை
புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் அவதூறு செய்திகளை பரப்பி கொண்டிருக்கின்றனர். எத்துனை முறை அவ்வாறான செய்திகளை மறுத்த போதும் நமது மறுப்பை வெளியிடாமல் தொடந்து அவதூறுகளை பரப்பி வரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)