இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் நின்றிருந்த காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் புத்த பிட்சுகளை தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த இனவெறி தாக்குதலால் வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் ஜும்மா பிரசங்கமும், தொழுகையும் நடைபெறவில்லை. அதற்கான தயாரிப்பில் முஸ்லிம்கள் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காட்டு மிராண்டித்தனமாக முஸ்லிம்களின் இறையில்லத்தின் மீது தாக்குதல் நடத்திய இனவெறி பிடித்த புத்த பிட்சுகளை கண்டிக்கும் வகையில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஏப்ரல் 23 மாலை 4மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் கலந்து கொண்டு கண்டன உரைநிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கண்டன உரை நிகழ்த்தும் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் |