சென்னை: நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சங்க்பரிவார அமைப்புகள் தான் என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்பரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நேற்று (ஜனரி-30) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.