நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 7 ஏப்ரல், 2012

அன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ஒரு ஆதாரம்!


புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகமூடி மீண்டும் கழன்று விழுந்துள்ளது. அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு உணவை சமைத்து வழங்கியது ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
We cooked and served rotis to Anna Hazare's workers -VHP
ராம்லீலா மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உணவை சமைத்து பரிமாறியது தங்களது தொண்டர்கள்தாம் என்பதை வி.ஹெச்.பியின் சர்வதேச பொதுச்செயலாளர் சம்பத்தி ரவி கூறியுள்ளார்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

இடஒதுக்கீடு விழிப்புணர்வு வீடியோ

சென்னை: மீடியா ரிசேர்ச் ஃபளெண்டேஷன் சார்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.





வியாழன், 5 ஏப்ரல், 2012

அல்லாஹ்வுக்காக‌ 5 நொடிகள், Please!


அஹமதாபாத் : ’டைம்’ இதழ் நடத்தும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் கணக்கெடுப்புக்காக குஜராத் முதல்வர் நரேந்திர  மோடி மோசடி செய்துள்ளார் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.
டைம் இதழின் கணக்கெடுப்பில் மோடி மோசடி
அஹமதபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர்,  குஜராத் அரசின் பல்வேறு  இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம்  இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

புதன், 4 ஏப்ரல், 2012

மின் கட்டணம் குறைப்பு: பேரவையில் ஜெ. அறிவிப்பு

சென்னை :- சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
 
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப் படுவதையும், சமூக நலன் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படுவதையும், லாபத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல் மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றுபவைதான் பொதுத்துறை நிறுவனங்கள். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் தமிழ்நாடு மின்சார வாரியம். எனது முந்தைய ஆட்சிக்காலத்தில், அதாவது 2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில், இன்னும் சொல்லப்போனால் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது.
 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக புதுக்கோட்டையில் இடஒதுக்கீடு மற்றும் சமூக மேம்பாடு கலந்தாய்வு கூட்டம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக புதுக்கோட்டையில் இடஒதுக்கீடு மற்றும் சமூக மேம்பாடு கலந்தாய்வு கூட்டம் ஹோட்டல் ராயல் பார்கில் நடைப்பெற்றது M .அபுபக்கர் சித்தீக் (மாவட்ட செயாலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தலைமை உரையாற்றினார்  
சிறப்புரை K.S.M.இப்ராஹிம் (மாநில பொருளாலர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) A.அபுபக்கர் சித்தீக்(SDPI மாநிலசெயல் குழு உறுப்பினர்) நன்றி உரையாற்றினார் அபுபக்கர் சித்தீக்(SDPI மாவட்ட பொதுச்செயாலாளர்) கூட்டத்திர்க்கு புதுக்கோட்டையில் உள்ள ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். இடஒதுக்கீடு மற்றும் சமூக மேம்பாடு பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் கள்ளகுறிச்சி இடஒதுக்கீடு சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் ................


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இடஒதுக்கீடு சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் கள்ளகுறிச்சி  மஹாலில் நடைப்பெற்றது.  
 சிறப்புரை :
                         M.முஹமது ஷேக் அன்சாரி (மாநில செயலாளர் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) கூட்டத்திர்க்கு விழுப்புரம் கள்ளகுறிச்சி ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இடஒதுக்கீடு பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டது .


பெங்களூர்: கேம்பஸ் ஃப்ரண்டின் கர்நாடக மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஏப்ரல் 1 ஞாயிற்றுகிழமை அன்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக துஃபைல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tufail

வருடத்திற்க் ஒரு முறை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறை நடைபெறுவது வழக்கம் அதன்படி கர்நாடக மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.பொதுச்செயலாளராக அப்துல் ரஹீம், துணைத்தலைவராக மெஹஃபூஸ் அஜன், செயலாளர்களாக ஹைதர் ஹபீப் மற்றும் சொஹைல் மற்றும் பொருளாளராக தஃப்ஸீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இனி வரக்கூடிய ஒருவருடத்திற்கான கேம்பஸ் ஃப்ரண்டின் கர்நாடக மாநில நிர்வாகிகளாக செயல்படுவார்கள்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

சிறுபான்மை சமூகத்தின் அரசியல்வாதிகளால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை!

மைசூர்: கர்நாடக மாநிலத்தில் அரசியல் விழிப்புணர்வை சிறுபான்மை சமூக மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் மாவட்டம் ரீதியாக‌ பல இடங்களில் "பீப்புல்ஸ் பொலிடிக்கல் கான்ஃபரென்ஸ்" (மக்கள் அரசியல் மாநாட்டை) எஸ்.டி.பி.ஐ கடந்த மாதம் முழுவதும் நடத்தி வந்தது. கடந்த மாதம் இறுதியில் மைசூர் கல்யான்கிரியிலுள்ள லித்கார் மைதானத்தில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் 15,000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Mysore Political Conference
 
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பிற்படுத்தப்பட்ட மக்கள் குழுவின் முன்னால் தலைவர் டாக்டர் பி.எஸ். துவார்கந்த் கூறும்போது "தலித், சிறுபான்மை மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலனவர்கள் தாங்கள் சார்ந்த கட்சியின் பிரதிநிதிகளாகவே செயல்படுகிறார்கள். தங்களை வெற்றி பெறச் செய்த தன் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வலிமைக்காகவும் எத்தகைய பணிகளையும் அவர்கள் செய்வதற்கு தயாராக இல்லை. தங்களை பாதுகாப்பாக வளர்த்தெடுத்த தம் சமூக மக்களை அவர்கள் மறந்துவிட்டார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.

உ.பி:உயர் அதிகாரப் பதவிகளில் முஸ்லிம்கள் நியமனம்: பா.ஜ.க கொதிப்பு!


லக்னோ : கடந்த மாதம் மூத்த முஸ்லிம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜாவேத் உஸ்மானி உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவின்(BMAC) கன்வீனர் ஸஃபர்யாப் ஜீலானி உ.பி மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாவேத் உஸ்மானி மற்றும் ஸஃபர்யாப் ஜீலானி
ஜாவேத் உஸ்மானியை தொடர்ந்து ஜீலானி உயர் அதிகாரப் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது பா.ஜ.கவுக்கு வயிற்றெரிச்சலை கடுமையாக கிளப்பியுள்ளது.

தமிழகத்தின் இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பு!


புதுடெல்லி : தமிழகத்தின் காரைக்குடியைச் சார்ந்த நீதிபதி ஃபக்கீர் முஹம்மது இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எச். கபாடியா நேற்று(திங்கள்கிழமை) காலை கலீஃபுல்லாஹ்வுக்கு  பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
Kalifulla sworn in as Supreme Court judge
ஜம்மு-கஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 31 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது 5 இடங்கள் காலியாக உள்ளன.

திங்கள், 2 ஏப்ரல், 2012

கோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டம்

கோவை: முஸ்லிம் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உறுதி செய்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சட்ட வரைவை நிறைவேற்றிட வேண்டி ஜனநாயக ரீதியிலும் மற்றும் ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் தேசிய அளவில் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி பேரணி, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கவர்னம் மாளிகை நோக்கி பேரணி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதை தொடர்ந்து...
எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி மத்தியில் தனி இடஒதுக்கீடு, மாநிலத்தில் உரிய இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 5 இடங்களில் நடத்த இருக்கின்றது. இப்போராடத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் விதமாக ஏப்ரல் 1 ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கரும்புகடை, சாரமேடு பகுதியில் மாலை 7.00மணியளவில் நடைபெற்றது.

NCHRO-வின் புதிய தேசிய தலைவராக பேராசிரியர் நாகரி பாபையா தேர்வு!


ஹைதராபாத் : தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமை (NCHRO) வின் தேசிய பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுகிழமை ஹைதராபாத்திலுள்ள மெஹபூர் ஹுஸைன் மஹாலில் வைத்து நடைபெற்றது. என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய ஒருங்கினைப்பாளர் ரேனி ஏலின் இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் நாகரி பாபையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப் இரண்டாண்டிற்கான அறிக்கையை சமர்பித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.
வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப் ஆண்டறிக்கையை சமர்பித்தார்

2012-2014ற்கான என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஆந்திராவில் வகுப்புவாத வன்முறை! நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தளத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான காபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Sanga Reddy
இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளனர். 

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பெரிய உணவு வர்த்தக நிறுவனங்கள் நச்சுத்தன்மையை மூடி மறைக்கின்றன – அறிக்கை!


புதுடெல்லி : கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
Maggi, Ramen noodles, McDonalds, KFC hides harmful effects -CSE
மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ)  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.