நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

தமிழகத்தின் இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பு!


புதுடெல்லி : தமிழகத்தின் காரைக்குடியைச் சார்ந்த நீதிபதி ஃபக்கீர் முஹம்மது இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எச். கபாடியா நேற்று(திங்கள்கிழமை) காலை கலீஃபுல்லாஹ்வுக்கு  பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
Kalifulla sworn in as Supreme Court judge
ஜம்மு-கஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 31 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது 5 இடங்கள் காலியாக உள்ளன.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 3-வது நீதிபதியாக கலீஃபுல்லாஹ் தற்பொழுது பொறுப்பேற்றுள்ளார். நீதிபதிகள் அல்டமஸ் கபீர், அஃப்தாப் ஆலம் ஆகியோர் இதர 2 நீதிபதிகள் ஆவர். தமிழகத்திலிருந்து நீதிபதி பி.சதாசிவத்துடன் பணியாற்றும் 2-வது நீதிபதி கலீஃபுல்லாஹ் ஆவார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1951-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி பிறந்த இப்ராஹிம் கலிஃபுல்லா, 1975-ம் ஆண்டு முதல் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். தொழில் சட்டங்களில் கவனம் செலுத்திய கலீஃபுல்லாஹ் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வழக்கறிஞராக பணியாற்றினார். தமிழ்நாடு மின்சார வாரிய வழக்கறிஞராகவும் சேவையாற்றியுள்ளார். 2000 ஆண்டு மார்ச் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நிரந்த நீதிபதியாக கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார். பின்னர், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஏப்ரலில் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.