நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பெரிய உணவு வர்த்தக நிறுவனங்கள் நச்சுத்தன்மையை மூடி மறைக்கின்றன – அறிக்கை!


புதுடெல்லி : கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
Maggi, Ramen noodles, McDonalds, KFC hides harmful effects -CSE
மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ)  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தகைய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் உடல் பருமன், நீரழிவு(சர்க்கரை வியாதி) நோய்களுக்கு(obesity and diabetes) காரணமான ட்ரான்ஸ் ஃபேட், இனிப்பு மற்றும் உப்பின்(rans-fats, salts and sugar) அளவு அதிகமாக உள்ளது என்று சி.எஸ்.இ தனது அறிக்கையில் கூறுகிறது.
16 பிரபல உணவு நிறுவனங்களின் தயாரிப்புகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இது தெரியவந்துள்ளது. மேகி, டாப் ரேமன் நூட்ல்ஸ், மெக்டொனால்ட், கேஎஃப்ஸி -கெண்டகி ப்ரைட் சிக்கன், ஹல்திராம் ஆலு பூஜிய ஆகிய ப்ராண்ட் உணவுகளில் ட்ரான்ஸ் ஃபேட்டின் அளவு கூடியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரெடிமேட் ஃபுட்களில்(ஆயத்த தயாரிப்பு உணவுகளில்) சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்களின் அளவு குறித்து உலக சுகாதார மையம்(who) பரிந்துரைத்துள்ளது. ஆனால், பரிசோதனைக்கு உட்படுத்திய இத்தகைய உணவுப்பொருட்களில் இந்த நிபந்தனைகள் எல்லாம் மீறப்பட்டுள்ளன என்று சி.எஸ்.இயின் ஆய்வறிக்கை கூறுகிறது.
ட்ரான்ஸ் ஃபேட் இதய தமனிகளில்(arteries) அடைந்து இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகும். இளைஞர்களை வெகு விரைவில் நோய்களுக்கு அடிமைகளாக்க இத்தகைய உணவு வகைகளால் இயலும்.
அண்மைக் காலமாக இளைஞர்களுக்கு நீரழிவு நோயும்(diabetes) மற்றும் கொலஸ்ட்ரோல்(கொழுப்பு) அதிகமாக காரணம் ஜங்க் ஃபுட்களின்(ஃபாஸ்ட் புட்) பழக்கம் அதிகமானதுதான்.
அதேவேளையில் இக்குற்றச்சாட்டுக்களை மேற்கூறிய நிறுவனங்கள் மறுத்துள்ளன. பெப்ஸிகோ, நெஸ்லே, மெக்டொனால்ட் ஆகிய நிறுவனங்கள் சி.எஸ்.இயின் அறிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளன.