நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 2 ஏப்ரல், 2012

NCHRO-வின் புதிய தேசிய தலைவராக பேராசிரியர் நாகரி பாபையா தேர்வு!


ஹைதராபாத் : தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமை (NCHRO) வின் தேசிய பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுகிழமை ஹைதராபாத்திலுள்ள மெஹபூர் ஹுஸைன் மஹாலில் வைத்து நடைபெற்றது. என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய ஒருங்கினைப்பாளர் ரேனி ஏலின் இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் நாகரி பாபையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப் இரண்டாண்டிற்கான அறிக்கையை சமர்பித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.
வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப் ஆண்டறிக்கையை சமர்பித்தார்

2012-2014ற்கான என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1. பேராசிரியர் நாகரி பாபையா - தலைவர்
2. டாக்டர் ஜான் தயால் (புதுடெல்லி) - துணைத்தலைவர்
3. வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப் - துணைத்தலைவர்
4. பேராசிரியர் கோயா - பொதுச்செயலாளர்
5. வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் (மதுரை) - செயலாளர்
6. ரேனி ஏலின் (திருவனந்தபுரம்) - செயலாளர்
7. பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் (டெல்லி பல்கலைகழகம்) - பொருளாளர்

தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:

1. பேராசிரியர் என். ரமேஷ், பெங்களூர்
2. கெளரி லங்கேஷ், பெங்களூர்
3. நரேந்திர மோஹந்தி, புவனேஸ்வர்
4. பி. அஹமது ஷரீஃப், கோழிகோடு
5. பொன்னையா சந்திரன், கோவை
6. எ.கே. அகோடியா, ஜெய்பூர்
7. என்.எம். சித்தீக், கொச்சி
8. கோ. சுகுமாரன், புதுச்சேரி
9. பேராசிரியர் மார்க்ஸ், சென்னை
10. குட்டி ரேவதி, சென்னை
11. ஸ்ரீனிவாச ராவ், ஹைதராபாத்
12. வழக்கறிஞர் ஜெஹதீஷ், பெங்களூர்
13. வழக்கறிஞர் தங்கசாமி, நெல்லை
14. வழக்கறிஞர் கார்திக், ஹைதராபாத்
15. முஹம்மது காகிஞ்சே, மங்களூர்

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள்:

1. டாக்டர் ஏ.பஷர், குவஹாத்தி
2. முஹம்மது தன்வீர், புதுடெல்லி
3. டாக்டர் ஷகீல் அஹமது, ஹைதராபாத்
4. டி. சுரேஷ் குமார், ஹைதராபாத்
5. ஆஷிம் ராய், அஹமதாபாத்

இறுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் பேராசிரியர் கோயா நன்றியுரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹம்மது ஆரிஃப் பாஷா உட்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்: 

1. AFSPA, UAPA போன்ற மக்கள் விரோத கடுமையான சட்டங்களை மத்திய மற்றும்  மாநில அரசுகள் திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய கொடிய சட்டங்களை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பல்வேறு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜம்மு கஷ்மீர், மேற்குவங்காளம், மணிப்பூர் போன்ற வடக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு இத்தகைய சட்டங்களை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதற்காக மணிப்பூரில் போராடி வருகின்ற‌ ஷர்மிளாவிற்கு என்.சி.ஹெச்.ஆர்.ஓ முழு ஆதரவு அளிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.  இப்பொதுக்குழுவையும், கருத்தரங்கத்தை நடத்தவிடாமல் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டையாக இருந்த ஹைதராபாத் காவல்துறையினரை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இப்பொதுக்குழுவை நடப்பதை தடுப்பதற்கான காரணங்களை தெரிவிக்காமல் மஹால் உரிமையாளர்களை மிரட்டுவது கடும் கண்டத்திற்குறியது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக மனித உரிமை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிராக காவல்துறையினர் சதி வேலைகளில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாக இருக்கிறது. மாநில அரசு இதில் தலையிட்டு இந்நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்க முயன்ற காவல்துறையினரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 

3. மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான சட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையாக ஒழுங்கு படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. பெயரளவில் சில சட்டங்களை வகுத்துக்கொள்வதால் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போய்விடுகிறது. இப்பேற்பட்ட அலட்சியங்களாலும் நாட்டில் மனித உரிமைகள் பெரும்பாலான இடங்களில் மீறப்பட்டு வருவதாக இப்பொதுக்குழு கருதுகிறது. எனவே மனித உரிமை தொடர்பான சட்டங்களை முறையாக வகுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 

4. தமிழகத்தில் அணு உலைக்கு எதிராக கூடங்குளம் கிராம மக்கள் இறுதி வரை போராடினார்கள். ஆனால் மக்கள் விரோத அட்சியாளர்களுக்கு முன்னால் சாதாரண பாமர மக்களால் ஈடுகொடுக்க முடியாது என்பதனையே கூடங்குளம் போராட்டம் உணர்த்துகிறது. தங்களுடைய பாதுகாப்பு மற்றும் பாரம்பரியத்தை இழந்து தவிக்கும் கூடங்குளம் மக்களுக்கு மேல் மற்றொரு சுமையாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 197 நபர்கள் மீது தமிழ அரசு வழக்கு தொடுத்துள்ளது. காவல்துறையினர் கூடங்குளத்தில் நடந்து கொண்டு விதங்களை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதோடு. அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.