கண்ணூர் : கேரள மாநிலம் தலசேரியில் தேசிய ஜனநாயக முன்னணியின்(என்.டி.எஃப்) உறுப்பினர் பி.கே.முஹம்மது ஃபஸலை வெட்டிக் கொலைச் செய்த வழக்கில் விசாரணையை சீர்குலைக்க போலீசும், க்ரைம் ப்ராஞ்சும் முயன்றதாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
இடதுசாரி கூட்டணி ஆட்சியில் நடந்த இந்த அநியாய படுகொலையில் குற்றவாளிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குண்டர்களை பாதுகாக்க அரசு மட்டத்தில் முயற்சிகள் நடந்துள்ளது என்பது சி.பி.ஐக்கு தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் முக்கிய சம்பவங்கள் நடந்தபொழுது அன்றைய உள்துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏவுமான கொடியேறி பாலகிருஷ்ணன் தலச்சேரியில் தங்கியிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.