கூடன்குளம் அணு உலை போராட்டம் என்பது இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் ல் நடைபெற்ற புகுஷிமா அணு உலை வெடிப்பிற்கு பிறகு இது தீவிரம் பெற்றுள்ளது.
கடந்த ஏழு மாத காலமாக கூடன்குளத்தை பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை வந்த வன்முறையில் ஈடுபடாமல் அகிம்சை வழியில் இப்போராட்டம் தொடர்கிறது.
மத்திய அரசு இப்போராட்டத்தை ஒடுக்க பல அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டும், கண் துடைப்பிற்காக வல்லுநர் குழுவை அமைத்தாலும் போராட்ட குழுவினர் தமிழக அரசையே முழுமையாக நம்பினர். க்மிழக அரசும் மக்களின் அச்சம் அகற்றப்படாமல் அணு உலை பணிகள் நடைபெறக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் இன்று தமிழக அமைச்சரவையின் கூடன்குளம் அணுஉலையை திறக்க வேண்டும் என்ற தீர்மானம் தங்களின் உயிர்வாழும் உரிமைக்காக தன்னெழுச்சியோடு போராடும் மக்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது.
தமிழக அரசு தனது தீர்மானத்தை பரிசீலித்து திரும்ப பெற வேண்டும். ஜனநாயக ரீதியில் அமைதி வழியில் போராடும் மக்களுக்கு எதிராக ஏந்த அடக்குமுறையையும் பிரயோகிக்க கூடாது. கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. கைது செய்யப்பட்ட போராட்ட குழுவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி செய்தி வெளியிட்டுள்ளார்.