இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவுடன் வென்றது.
குஜராத் மாநிலத்தில், முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன படுகொலை நடந்து முடிந்து, 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு, உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு மனித உரிமை இயக்கங்களும் குரல் கொடுத்தும் பயனில்லை.
படுகொலையின்பொழுது, குண்டர்களோடு கைகோர்த்துக் கொண்ட காவல்துறையினருக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டது, கொலைகாரக் கும்பலை கைது செய்யத் துணிந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்படுகொலையில் காவல்துறையினருக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதால் 2107 வழக்குகள் காவல் நிலையத்திலேயே புதைக்கப்பட்டன. இப்படி விசாரணையின்றி மூடப்பட்ட வழக்குகளில் 1594 வழக்குகளை மீண்டும் நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், குஜராத் காவல்துறையினர் வெறும் 117 வழக்குகளில் மட்டும் விசாரணை நடத்தி வருகிறது.
குஜராத் மாநில அரசில் இருந்த, 65 ஐ.பி.எஸ் பதவிகளில் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.
அரக்கர்களே "அரசு வழக்கறிஞர்களாக" நியமிக்கப்பட்டனர் :
குஜராத் மாநில விசுவ இந்து பரிஷத் பொதுச்செயலாளர் திலீப் திரிவேதி, விசுவ இந்து பரிசத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவரான பாரத் பட், பாஞ்ச்மஹால் மாவட்ட விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் பியுஷ் காந்தி என இவர்களைப் போன்ற சங்கப்பரிவார ஆட்கள்தான் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். “ஒவ்வொரு நீதிபதியும் தொலைவில் இருந்துகொண்டே எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் ஏனென்றால், அவர்கள் அனைவரும் அடிப்படையில் இந்துக்கள்” என சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்டியா, நீதிபதிகளின் இந்து மனோபாவத்தை வெளிப்படையாகவே புட்டு வைத்தார்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு, என நீட்டி முழங்கும் எந்தவொரு கட்சியும் இந்த வெட்கக்கேட்டைக் கண்டிக்க முன்வரவில்லை. இது மட்டுமல்ல, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட மதச்சார்பின்மை பேசும் கட்சிகளில் ஒன்றுகூட, கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.
முஸ்லிம்களுக்கு தூக்கு! பயங்கரவாதிகளுக்கு பல்லக்கு!
கோத்ரா ரயில் விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்ட பானர்ஜி கமிஷன், “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானது, சதிச் செயல் அல்ல’’ எனக்கூறியது. மோடி அரசின் முயற்ச்சிகளால், இந்த அறிக்கையைத் தடை செய்ததோடு, அதனைச் சட்ட விரோதமானது என்று கூறி 2005-ல் தீர்ப்பளித்தது குஜராத் உயர் நீதிமன்றம். அத்தீர்ப்பைத் தடைசெய்ய முடியாது என 2006 இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஆனாலும் அந்த வழக்கில் 11 முஸ்லீம்களுக்கு தூக்கு தண்டனையும், 20 முஸ்லீம்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் இனப்படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய பாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல், மாயா கோத்நானி உள்ளிட்ட பலரும் பிணையில் வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.
"துக்ளக்" சோ போன்ற பார்ப்பன ஃபாசிஸ்டுகள், இன படுகொலைகள் மூலம்தான் முஸ்லீம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியுமே தவிர, சட்டம் நீதிமன்றம் மூலம் இதனைச் சாதிக்க முடியாது, என வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். அரசியல் செல்வாக்குமிக்க இந்து மதவெறி பயங்கரவாதிகளான மோடி, அத்வானி, பால் தாக்கரே போன்றவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது எனும்பொழுது, "சோ"வின் வாதத்தை இக்கும்பலுக்கு நாம் ஏன் பொருத்தக்கூடாது?