நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 23 மார்ச், 2012

கூடங்குளம்​:போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற வைகோ, நெல்லை முபா​ரக், சீமான், கொளத்தூர் மணி கைது!


திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட்  உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வைகோ, நெல்லை முபாரக், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேரணியாக இடிந்தகரை நோக்கிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாளையங்கோட்டை, கூடங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.