நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 12 அக்டோபர், 2011

குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பை நிறுத்தக்கோரி குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
s.court

கலவரம் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை துவங்கிய சூழலில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பை நிறுத்தவேண்டும் என குஜராத் அரசு தனது மனுவில் கோரியிருந்தது. ஆனால், குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த பிறகும் கண்காணிப்பை தொடர்வது புதிய நிகழ்வு இல்லை எனவும், இனியும் பல மாதங்கள் கண்காணிப்பு தொடரும் எனவும் மனுவை தள்ளுபடிச் செய்துவிட்டு நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், பி.சதாசிவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.