நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாநில பொதுக்குழு 09.10.2011 அன்று தேனியில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு NWF-ன் மாநில துணைத்தலைவர் ஃபாத்திமா ஆலிமா அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதன் பிறகு மாநில பொதுச் செயலாளர் ஷிபா அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து ஆண்டறிக்கை பற்றிய மீளாய்வு மற்றும் வருங்காலத்தில் செய்ய வேண்டிய அம்சங்கள் குறித்த விவாதம் நடைபெற்றது. பின்னர், வருகின்ற இரண்டாண்டு காலத்திற்கான மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய மாநில நிர்வாகிகளை NWF-ன் தேசிய தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த தேர்தலை நடத்தினார்.மாநில நிர்வாகிகள்
மாநில தலைவர் : ஃபாத்திமா ஆலிமா,
நெல்லைமாநில துணைத் தலைவர் : ஆசியா மரியம்,மதுரைமாநில பொதுச் செயலாளர் : ஷிஃபா, கோவை
மாநில செயலாளர்கள் : ரஜியா, மதுரைஹபீபுன்நிஸா, கோவை
மாநில பொருளாளர் : ஆயிஷா சித்தீகா, கோவை
1. சித்தி ஆலியா, சென்னை
2. ஃபாத்திமா, திருப்பூர்
3. சஃபியா, ஈரோடு
4. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ், நெல்லை
5. உபைதா, கோவை
6. பெனாசிர், கோவை
7. ஜரீனா, சென்னை
8. நபீசா, சென்னை
9. ஜீனத் ஆலிமா, சென்னை
குடும்பத்தையும் சமூக பணியையும் ஒருங்கிணைத்து திறம்பட செயல்படுவது எப்படி ?, அரசியல் களத்தில் கால் பதித்து பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பாடுபடுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து குழு விவாதம் நடந்தது. பின்னர் புதிதாக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் நிறைவுரையாற்றினார்.
இப்பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தர்மபுரி மாவட்ட மலைக்கிராமம் வாச்சாத்தியில் கடந்த 1992ம் ஆண்டு ஜூன் மாதம் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பெண்கள். உள்ளிட்ட பலரை அடித்து சித்திரவதை செய்து, 90 பெண்கள், 28 சிறுவர், சிறுமியர் உட்பட 133 பேரை கைது செய்து, 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 215 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கிய தர்மபுரி நீதிமன்றத்தின் தீர்ப்பை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) வரவேற்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு இவ்வழக்கை திறம்பட நடத்தி அரசு இருந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த சி.பி.ஐ.யை NWF பாராட்டுகின்றது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ள தலா ரூ. 15,000 இழப்பீடு போதாது. கடந்த 19 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடிய பாதிக்கப்பட்ட பெண்களின் மன உறுதியைக் கருத்தில் கொண்டு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் தமிழக முதல்வரை NWF கேட்டுக்கொள்கிறது.
2. ரத யாத்திரைகளின் மூலம் துவேஷத்தை விதைத்து, பல வகுப்பு கலவரங்களுக்குக் காரணமாக இருந்த பா.ஜ.க தலைவர் அத்வானி இப்போது மீண்டும் ரத யாத்திரை என்ற பெயரில் விஷவிதையை தூவுவதற்காக தமிழகத்திற்கு வரும் அத்வானியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என NWF கேட்டுக் கொள்கின்றது.
3. பசியிலிருந்து பயத்தியிருந்து என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) வேட்பாளர்களை நடைபெறவிக்கும் தமிழக உள்ளாட்சித் களப்பணியாற்றி வெற்றி பெறச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
4. ஜாதி வாரி கணக்கெடுப்பும், அதன் அடிப்படையிலான சரிவிகித இடஓதுக்கீடும் ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அந்த சமூகங்களை வலிமைப்படுத்தவும் அவசியமானதாகும். 2011 ஜூன் முதல் செப்டம்பர் வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கடந்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மத்திய அரசு அறிவித்திருந்தது. செப்டம்பர் மாதம் கடந்து விட்ட பிறகும் மத்திய அரசு இதனை கண்டு கொள்ளாமலிருப்பதை NWF வன்மையாக கண்டிக்கிறது. எனவே மத்திய அரசு உடனே ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான பணிகளை துவக்க வேண்டும் என NWF கேட்டுக் கொள்கின்றது.
5. சங்பரிவார குண்டு வெடிப்புகளை மக்கள் மனதிலிருந்து மறக்கடிப்பதற்காக ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.யின் பின்புலத்தோடு நடைபெற்ற அன்னா ஹஸாரேயின் போலி உண்ணாவிரதத்தையும், அதை தொடர்ந்து அன்னா ஹஸாரேயையும் பெரிய அளவில் முக்கியத்துவப்படுத்தி பிரபலப் படுத்தி வரும் மீடியாக்கள், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராகவும் மணிப்பூரில் 10 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து போராடி வரும் இரோம் ஷர்மிளாவை கண்டு கொள்ளாதது ஏன் என NWF கேள்வி எழுப்புகின்றது. மீடியாக்கள் மக்கள் நன்மைக்காகவும், நீதிக்கான போராட்டங்களுக்காகவும் நடுநிலையோடு துணை நிற்க வேண்டுமென NWF கேட்டுக் கொள்கிறது.
6. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் பிரதிநிதித்துவத்திற்கேற்ப முஸ்லிம் மகளிருக்கும் உள் ஓதுக்கீடு வழங்க வேண்டுமெனவும், வருகின்ற பாராளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரிலேயே இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் மத்திய அரசை NWF கேட்டுக்கொள்கிறது.