நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 8 செப்டம்பர், 2011

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?




சுதந்திர காற்று எல்லா மனிதனும் சுவாசிக்க விரும்புவது. பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு, சுதந்திரம் அடைந்து தற்போது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடுவது நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை.
இந்தியாவில் ஏறத்தாழ இருபது சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் மீது அவர்கள் செய்யாத ஒரு குற்றம் பல ஆண்டுகளாக சுமத்தப்பட்டு வருகிறது. தேசப்பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பதுதான் அந்த பழி. பாசிச சங்பரிவார கும்பல்தான் இந்த பிரச்சாரத்தை முன்னின்று செய்து வருகிறது.
தேசத்தந்தை காந்தியடிகள் படுகொலை, பாபரி மஸ்ஜித் இடிப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான ஏராளமான கலவரங்கள் என பல குற்றங்களை புரிந்த இவர்கள் தான் முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேசப் பிரிவினையின் உண்மை வரலாறு அறிஞர்களாலும் வரலாற்று ஆய்வாளர்களாலும் வெளியுலகிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த உண்மையை எடுத்துச் சென்ற முஸ்லிம்கள், தேச விடுதலைக்கு தாங்கள் அதிக அளவில் பங்களிப்பு செய்தனர் என்பதையும் தேசப் பிரிவினைக்கு தாங்கள் காரணம் கிடையாது என்பதையும் பெருமையுடன் பறை சாற்றினர். ஆனால் சுமத்தப்பட்ட வீண் பழி அவ்வளவு சீக்கிரமாக மறையவில்லை. ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் முஸ்லிம்கள் சோதனை என்ற பெயரில் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். உளவுத்துறையும் காவல்துறையும் இதனை செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சில குறுமதியினர் முஸ்லிம்களுக்கு எதிராக புழுதியை வாரி தூற்றுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், விடுதலை போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாத கூட்டத்தினர் தான் முஸ்லிம்களை இம்சிக்கின்றனர்.
ஆண்டுதோறும் முஸ்லிம்களும் முஸ்லிம் இயக்கங்களும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தை கொண்டாடும் வழக்கம் சங்பரிவார கும்பல்களுக்கு கிடையாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல முனைகளிலும் இருந்து எதிர்ப்பு வரவே, சமீப காலங்களில்தான் சில இடங்களில் தேசிய கொடியை அவர்கள் ஏற்றுகின்றனர்.
சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் கேரளாவிலும் 2008ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலும் இந்த அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. பாப்புலர் ஃபிரண்ட் உறுப்பினர்களின் முறையான அணிவகுப்பு, சுதந்திர தின உரை, சுதந்திர தியாகிகளை கௌரவப்படுத்துதல் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுபவை. சென்ற ஆண்டு சில சில்லரை அரசியல் காரணங்களுக்காக கேரளா அரசு அணிவகுப்பிற்கு தடை விதித்தது. தமிழகத்தில் இதுவரை வீதியில் அணிவகுப்பு செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. கர்நாடக பா.ஜ.க அரசு இந்த அணிவகுப்பிற்கு அனுமதி தர தயாராக இல்லை.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மூன்று மாநிலங்களில் சுதந்திர தின அணிவகுப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் மூன்று மாநிலங்களிலும் அணிவகுப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மனம் நொந்துள்ள முஸ்லிம்கள் அரசாங்கத்திடம் ஒரே ஒரு கேள்வியைதான் முன்வைக்கின்றனர்: ‘எங்களுக்கு இந்த நாட்டில் சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதியில்லையா?’
ஆனால் அதே சுதந்திர தினத்தன்று கேரளாவின் பல பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகளை நடத்தியது. தங்களின் பாரம்பரிய அரை நிர்வாண உடையில் அணிவகுப்பு நடத்திய இவர்கள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காணப்பட்டனர். தேசிய கொடியை சில இடங்களில் மட்டும் இவர்கள் ஏந்தி சென்றனர். ஆர்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்புகள் அனைத்தும் எவ்வித அனுமதியும் இன்றி நடத்தப்பட்டவை என்று தெரிகிறது.
அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் மேற்கொள்ளப்படும் இரட்டை நடைமுறைகளையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. தேசிய கொடியுடன் அணிவகுப்பு செல்ல முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்படும் அதே இடத்தில் ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்ல சங்பரிவார கும்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சீறுடைகளுடன் வீதிகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது நமது நாட்டில் ஒரு சாதாரண நடைமுறை. அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதனை செய்து வருகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் தற்போது எழும் கேள்வி. இதன் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த அரசாங்கமும் உளவுத்துறையும் விரும்புகிறதா?
சுதந்திர தின கொண்டாட்டம் என்பது அனைவரின் அடிப்படை உரிமை. இது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.