நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 செப்டம்பர், 2011

இது உளவுத் துறையின் தோல்வியால் நடந்த குண்டுவெடிப்பு - மன்மோகன் சிங்

டெல்லி : உளவுத் துறை சரியான நேரத்துக்கு துப்பு கொடுத்து எச்சரிக்காததால்தான் இந்த குண்டுவெடிப்பே நிகழ்ந்தது, என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

15-வது தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், "தீவிரவாதமும், இடது சாரி நக்சல் தீவிரவாதமும் நமது நாட்டுக்கு இரு பெரும் சவால்களாக உள்ளன. தவறான போதனைகள் மூலம் தீவிரவாதிகள் இத்தகைய நாசவேலையை நியப்படுத்துகின்றனர். நாகரீகமுள்ள எந்த ஒரு சமுதாயமும் இத்தகைய இழப்பையும், அன்புக் குரியவர்கள் உயிர் பறி போவதையும் ஏற்க இயலாது.

நாம் ஒருங்கிணைந்து இந்த தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும். இளைஞர்கள் தீவிரவாத பாதைக்கு செல்வதைத் தடுக்க வேண்டும். டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு, நாம் தீவிரவாதத்துக்கு எதிராக விழிப்பாக இல்லை என்பதையே காட்டுகிறது.

தகவல் தரத் தவறிய உளவுத் துறை

நமது உளவுத்துறையினர் சரியான நேரத்துக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்யாததால் டெல்லி குண்டு வெடிப்பைத் தடுக்க முடியாமல் போய் விட்டது. தீவிரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில் நாம் இன்னும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் நமது உளவுப்பிரிவையும் விசாரணை அமைப்பையும் வலுப்படுத்த வேண்டும். உளவுத்துறை தகவல்கள் திரட்டுவதை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

உளவு தகவல்களை மத்திய அரசுடன் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கான மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன.

பக்கத்து நாடுகளுடன் சேர்ந்து தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. சில நாடுகள் இதற்கு சாதகமான பதில் அளித்துள்ளன. வேலை வாய்ப்புகள் இல்லாததும்கூட இளைஞர்களை தீவிரவாதம் நோக்கி செல்ல வைத்து விடுகிறது. உரிய கல்வி மற்றும் திறமை மேம்பாட்டு வாய்ப்புகள் மூலம் இளைஞர்களை நல்வழிபடுத்த முடியும்.

நமது நாட்டில் நக்சலைட் தீவிரவாதத்தை ஒடுக்க அரசு மிகுந்த கவனம் எடுத்துள்ளது. இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களில் ஏற்படும் சாதி-மத மோதல்களை போலீசார் கவனமுடன் கையாள வேண்டும். இந்த விஷயத்தில் போலீசார் விருப்பு, வெறுப்பின்றி நடந்து கொள்ள வேண்டும்.

கிரிமினல் குற்றம் செய்பவர்களுக்கும், தவறாக வழி நடத்தப்படும் கும்பல்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டியது அவசியம். ஆயுதமின்றி போராடுபவர்களிடம் போலீசார் உரிய முறையில் செயல்பட வேண்டும். இதற்கு ஏற்ப போலீசாருக்கு பயிற்சி அளிக்க மாநில முதல்வர்களை கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.