நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சி விமான நிலையத்தில் கைது

கொச்சி: முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி, ராமஜெயம் இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட வாங்கப்பட்ட நிலம், மிரட்டப்பட்டு பறிக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் நேரு உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், ராமஜெயம் அப்போது வெளிநாட்டில் இருந்தார். இதனால் அவர் கைதாவதில் சிக்கல் எழுந்தது. இந் நிலையில் இந்தியா திரும்பிவிட்ட அவர் திருச்சி பக்கம் வரவில்லை. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் குறித்த விவரத்தை தமிழக போலீசார் நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பிவைத்தனர். இவர் மீது வழக்கு இருப்பதால், இவர் வந்தால் கைது செய்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கோரியிருந்தனர்.

இந் நி்லையில் ராமஜெயம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து துபாய் விமானத்தில் மலேசியா செல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த விமான நிலைய அதிகாரிகள், உங்கள் மேல் வழக்கு உள்ளது என்று கூறி, அவரை தனி அறையில் அமர வைத்துவிட்டு தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு திருச்சி போலீசார் கோரினர். இதைத் தொடர்ந்து கேரள மாநிலம், நெடுமஞ்சேரி காவல் நிலைய போலீசார் வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை திருச்சிக்குக் கொண்டு வர திருச்சி போலீசார் கொச்சி விமான நிலையத்திற்கு விரைந்துள்ளனர்.

கலைஞர் அறிவாலயம் தவிர, திருச்சி காஞ்சனா டவர்ஸ் ஹோட்டல் வழக்கிலும் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.