நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 செப்டம்பர், 2011

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம்! - ஜெயலலிதா

சென்னை : கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

போக்குவரத்து துறைமானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் விஜய் பேசுகையில், "கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனி புத்தகமே வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த புத்தகத்தின் நகல்களை பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் எழுந்து, "இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுகையில், "கடந்த ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் எத்தகைய ஊழல் நடந்துள்ளது என்பதை அமைச்சர் விஜய் எடுத்துரைத்தார்.

இதன் மீது விசாரணை நடத்த இப்போதே விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிட வேண்டும் என்று குணசேகரன் கேட்டுக் கொண்டார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவசரப்பட்டு செயல்பட மாட்டோம். எதையுமே நன்கு சிந்தித்து, ஆர, அமர அடியெடுத்து செயல்படுகிறோம். அதனால்தான் வெற்றி பெற்று வருகிறேன்.

இந்த பிரச்சனையிலும் சீர்தூக்கி பார்த்து எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் செய்தவர்களை இந்த அரசு சும்மா விடாது. உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார்.