நெல்லை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடந்த 17ம் தேதி (நேற்றையதினம்) கடயநல்லூர் ரஹ்மானியாபுரம் 5 வது தெருவில் வசித்து வரும் ரம்ஜான் என்ற ஏழை பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.
கடயநல்லூர் நகர செயலாளர் எஸ். முஹம்மது கனி தையல் இயந்திரத்தை வழங்கிய போது |
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலிமைப்படுத்துவது என்ற லட்சியத்துடன் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூகத்தை மேம்படுத்தக்கூடிய பல பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.