நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ். அமீர் ஹம்ஜா தலைமை தாங்கினார்.
தமிழக மக்களால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்ற திட்டம் தான் சேது சமுத்திர திட்டம். பொருளாதார ரீதியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழகத்தை முன்னேறச் செய்யும் இந்த திட்டத்தை முடக்கவும் இதனை செயல்படுத்தவிடாமல் தடுக்கவும் ஃபாசிஸ கும்பல்கள் இராமர் பெயரை உபயோகப்படுத்திக்கொண்டு அந்த மணல் திட்டை இராமர் பாலம் என்றும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகின்றனர். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு படி மேலே போய் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனை கண்டிக்கும் விதமாகவும், சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரியும் எஸ்.டி.பி.ஐ சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 


இதில் எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் ரஃபீக் அஹமது கண்டன உரை நிகழ்த்தினார், மாநில செயற்குழு உறுப்பினர் இரத்தினம், ம.தி.மு.கவின் மாநில துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, சென்னை மாமன்ற உறுப்பினர் சீமா பஷீர், திராவிட கழகத்தின் மாணவரணி செயலாளர் பெரியார் சாக்கிரடீஸ், எஸ்.டி.பி.ஐயின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத், தென் சென்னை மாவட்ட தலைவர் பி. முஹம்மது ஹுஸைன், பொதுச்செயலாளர் ஷாலிஹ், செயலாளர் நெதாஜி ஜமால், கரீம், உட்பட பலரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன் கோஷங்களை எழுப்பினர்.