நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 10 ஜனவரி, 2012

நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் SDPI கடும் கண்டனம்



சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில், முதல்வரைப்பற்றி விமர்சிக்கப்பட்டிருந்தது என்று காரணம் காட்டி நக்கீரன் பத்திரிகை அலுவலகம் பல முறை தாக்கப்பட்டிருப்பதும், நக்கீரன் பத்திரிகை அலுவலகத்திற்கான மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

தேவையற்ற தனி நபர் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கது. அதே சமயம், தனி நபர் விமர்சனங்கள் வரம்பு மீறும்போது அதற்காக சட்ட ரீதியான நடவடிக்கை மூலமாகவோ, ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலமாகவோதான் எதிர் கொள்ள வேண்டும். அதைத்தவிர்த்து பத்திரிகை நிறுவனம் மீதான இது போன்ற வன்முறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். 


இப்படிக்கு

K.K.S.M. தெஹ்லான் பாகவி
மாநில தலைவர் 
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)