நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 10 ஜனவரி, 2012

ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை


பிஜாப்பூர் : கர்நாடகா மாநிலம் பிஜாப்பூரில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ஸ்ரீராமசேனாவை தடைச் செய்யவேண்டும் என கர்நாடாகா மாநிலத்தில் பல்வேறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளன.
ஸ்ரீராமசேனா தேசவிரோத செயலை புரிந்தது நிரூபணமான சூழலில் அந்த அமைப்பை தடைச்செய்ய வேண்டும் என்றும், அந்த அமைப்பின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெற்கு கன்னட காங்கிரஸ் தலைவரும், பந்த்வால் எம்.எல்.ஏவுமான ராமநாத் ராஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரத்தை உருவாக்கி வாக்கு சேகரிக்க பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் முயல்வதாக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான ஹெச்.டி.குமாரசுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.