நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 13 ஜனவரி, 2012

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை


சென்னை : பா.ஜ.கவின் ரதயாத்திரை புகழ் எல்.கே.அத்வானியும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியும் இன்று சென்னை வருகின்றனர்.

தமிழகத்தில் பாசிஸ்டுகளின் ஏஜண்டாக செயல்பட்டுவரும் ‘சோ’ ராமசாமியின் துக்ளக் பத்திரிகையின் 43-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் வருகை தருகின்றனர். சிங்கப்பூரில் சிகிட்சை முடிந்து சென்னையில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்தை இருவரும் சந்திப்பார்கள் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.மேலும் இவர்கள் தங்களது இனியதோழியும், தமிழ முதல்வருமான ஜெயலலிதாவையும் சந்திப்பார்கள் என உறுதிச் செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உற்றத்தோழி சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு ‘சோ’ உள்ளிட்ட பார்ப்பன பாசிச கும்பல் போயஸில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
நக்கீரனில் வெளியான ‘மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்’ என்ற செய்திக்கட்டுரைக்கு பதிலளித்த ஜெயலலிதா தான் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார்.
முன்பு சட்டசபையில் “நான் பாப்பாத்தி” என்றும், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில்  “ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல், வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்?” என்றும் கேட்ட ஜெயலலிதா
பாசிஸ்டுகளின் நெஞ்சில் பாலை வார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோடி, அத்வானியின் சென்னை வருகை அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.கவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியாக இருக்குமா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.