மதுரை: 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்.
மேலும் காயமடைந்தவர்களை பார்வையிட வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனில் மிஸ்ரா அவர்களிடம் என்ன உதவி வேண்டும் என்றாலும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக உதவுவதற்கு தயாராக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவுத்தனர்.
மேலும் காயமடைந்தவர்களை பார்வையிட வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனில் மிஸ்ரா அவர்களிடம் என்ன உதவி வேண்டும் என்றாலும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக உதவுவதற்கு தயாராக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவுத்தனர்.