சமூக விரோத இனவாத சக்திகளின் சதியினால் அஸ்ஸாமில் துரதிஷ்டவசமாக நடந்து வரும் கலவரத்தில் பல பேர் கொல்லப்பட்டுள்ளதும், பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதும் குறித்து தனது ஆழ்ந்த வேதனையை தெரியப்படுத்தியுள்ளார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர். கோக்ரஜார், துப்ரி, சிராங் மற்றும் போங்கைகாவ்ன்
போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கலவரத்திற்கு மாநில அரசின் பொறுப்பற்ற தன்மைதான் காரணம் என்றும் உள்ளூர் அளவில் சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களை தொடந்து உருவான கலவர சூழலை அறிந்தும் அனைத்து சமூக மக்களுக்கும் போதிய பாதுகாப்பை வழங்கிட மாநில அரசு தவறிவிட்டது.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கலவரத்தை தூண்டும் இனவாத குழுக்களை கட்டுப்படுத்தும் வண்ணம் மத்திய அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகின்றது.
மாநில அரசின் செயல்படாத தன்மை நிரூபிக்கப்பட்டுள்ள இச்சூழலில் மத்திய அரசு உடனே தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், புகலிடம், பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும்.
மேலும், அஸ்ஸாம் மக்கள் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.