நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

தேஜஸ் பத்திரிகைக்குச் சிவசேனா கொலைமிரட்டல்!


  

கேரளா: திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில் புதையலுக்குப் பாதுகாப்பு தொடர்பான செய்தியினை வெளியிட்ட தேஜஸ் பத்திரிகைக்கு சிவசேனா கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் கோட்டையினுள் பத்மனாப சுவாமி கோயில் உள்ளது. இங்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரண, தங்க நாணய புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதையலைப் பாதுகாப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க அமிக்கஸ் க்யூரியினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த அமிக்கஸ் க்யூரி அளித்த பாதுகாப்பு அறிக்கையினை விரிவாக தேஜஸ் பத்திரிகை வெளியிட்டது. 


இதனைத் தொடர்ந்து நேற்று காலை தேஜஸ் பத்திரிகை தலைமை அலுவலகம் மற்றும் அதன் செய்தியாளர்களின் கைப்பேசி எண்களுக்கு சிவசேனையைச் சேர்ந்தவர்கள் அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக தேஜஸ் பத்திரிகை ஆசிரியர் திருவனந்தபுரம் சிட்டி கமிசனர் பி. விஜயனைச் சந்தித்து புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிசனர் பி. விஜயன் உறுதியளித்தார். 

திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் சிவசேனையினரின் ஆதிக்கம் அதிகம். பத்மனாப சுவாமி கோயிலில் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், பல ஆபரணங்கள் அதிலிருந்து காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்தே உச்ச நீதிமன்றம் தலையிட்டு அமிக்கஸ் க்யூரியினை நியமித்தது. தற்போது அமிக்கஸ் க்யூரி அளித்துள்ள அறிக்கையில் சிவசேனைமீது விமர்சனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையினை தேஜஸ் பத்திரிகை வெளியிட்டதன் காரணமாகவே சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

நன்றி:
http://www.inneram.com/news/india/1206-tejas-journal-threat.html