நெல்லை மேற்கு
மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில்
06-08-2013 மதியம் 3-00 மணியளவில் பள்ளிவாசல் தெற்கு தெருவில் (மாற்று பாதை
இருந்தும்) பிரச்சனை செய்யும் நோக்கில் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த சிலர் சவ
ஊர்வலம் சென்று முஸ்லிம் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விஷயத்தை
கேள்விப்பட்டவுடன் நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம் உஸ்மானி,மாவட்ட செயலாளர் லுக்மான் ஹக்கீம்
மற்றும் SDPI கட்சியின் மாவட்டத் தலைவர்
ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர் யாசர் கான், ஆகியோர் கழுநீர்குளம் ஜமாத்தை
சந்தித்து விபரங்களை கேட்டறிந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர் DSPயை நேரடியாக
சந்தித்து நிலைமைகளை எடுத்துக்கூறி தேவர் சமுதாயத்தைச் சார்ந்த குற்றவாளிகளை
விரைவாக கைது செய்ய கோரினர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.