நெல்லை : முஸ்லிம்களை குறி வைக்கும் காவல்துறையின் அராஜகப்போக்கைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தையில் வைத்து மாபெரும் கண்டனப் போராட்டம் இன்று (12.8.2013) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் அஹமது நவவி தலைமை தாங்கினார்.
இதில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான், மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா, மாவட்ட துணை தலைவர் K.S.ஷாகுல் ஹமீது உஸ்மானி, CPI (ML) மாநில குழு உறுப்பினர் ரமேஷ், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் தென்மண்டல இளைஞரணி செயலாளர் களந்தை A.K.நெல்லை, இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் கூட்டமைப்பி தோழர் பீட்டர், ஆதித்தமிழர் பேரவை தோழர் கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் MC கார்த்திக், INTJ மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது மற்றும் SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு :
- பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் மேலப்பாளையம் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
- காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கியுள்ள மற்றும் நிரபராதிகள் தங்களை குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க ஜாமீனில் வெளிவருவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ள UAPA எனும் ஆள்தூக்கி கருப்புச் சட்டத்தின் பிரிவுகளை மேற்படி இரண்டு வழக்குகளிலிருந்தும் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் உடனே வாபஸ் பெற வேண்டும்.
- உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.அதே சமயத்தில் அப்பாவி முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் கைது செய்து சித்தரவதைக்குள்ளாக்கி குற்றவாளிகளாக்கும் போக்கையும், முஸ்லிம் முஹல்லாக்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதையும் காவல்துறை உடனே கைவிட வேண்டும்.
- தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு விசாரணையின் கோணத்தை சரிசெய்ய வேண்டும் மற்றும் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
- பந்த் என்ற பெயரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் நடத்திய, முஸ்லிம்களின் கடைகளை அடித்து நொறுக்கிய, முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்திய சங்கபரிவார அமைப்பினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது
SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது
SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் I.உஸ்மான் கான்
பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட தலைவர் S.அஹமது நவவி
பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் செய்யது அப்துல் கரீம்
SDPI கட்சியின் நெல்லை மாவட்ட துணை தலைவர் K.S.ஷாகுல் ஹமீது உஸ்மானி
த.ம.மு.க. தென்மண்டல இளைஞரணி செயலாளர் களந்தை A.K.நெல்சன்
பீட்டர், இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் கூட்டமைப்பு
சி.பி.ஐ.(ML) மாநில குழு உறுப்பினர், Advocate G.ரமேஷ் Bcom BL
தோழர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் வீர தளவதி MC கார்த்திக்
INTJ மாநில செயலாளர், அப்துல் காதர் மன்பஈ
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகிகள்
மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி