நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 6 மார்ச், 2013

64 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவிகள் சாதனை

வடகரை :- நாட்டின் 64 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பாரதியார் நினைவு விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் குங்ஃபு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலிமிருந்து 722 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பண்பொழி செயிண்ட் ஜோசப் மேல்நிலை பள்ளியின் சார்பில் வடகரையை சார்ந்த சகோதரிகள் ரிஷிகா மற்றம் ஷபானா ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இருவரும் சிற வயதிலிருந்தே கராத்தே, குங்ஃபு, டேக்வோண்டா போட்டிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை மாறிமாறி தக்க வைத்து வருகின்றனர்.



   இந்த சாதனை மாணவிகளை நெல்லை மேற்கு மாவட்ட நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் கடையநல்லூரை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

   இதேபோன்று நெல்லை மாவட்டம் பூலாங்குடியிருப்பை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் அப்துல்காதர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.