நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 31 மே, 2013

கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த UAPA விற்கு எதிரான மக்களின் எழுச்சி!


திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்திருந்தார்.



 இப்பயணம்நேற்று(மே 30-ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளம், பல மணிநேரங்கள் கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது. சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது. மாலை 3.30 மணியளவில் பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய மக்கள் எழுச்சிப் பேரணி புத்தரிக் கண்டம் நிறைவுற்றது.பேரணி  இரவு 7 .30 மணி வரை ஆகியும் நீடித்து கொண்டே சென்றது .இதே போல் பேரணி எப்பவும் இங்கே நடந்தது இல்லை என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்

யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ்பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது. மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட கண்டன மாநாடு துவங்கியது. மஃரிப் தொழுகைக்காக 6.45 மணிக்கு இடைவேளை விட்ட வேளையிலும் கூட மக்கள் கூட்டங்கூட்டமாக மாநாட்டு அரங்கிற்குள் வந்துகொண்டிருந்தனர். பிஞ்சுக்குழந்தைகள் முதல் வயோதிகர் வரை தாங்களும் இப்போராட்டத்தில் பங்காளர்கள் என்ற முறையில் கலந்துகொண்டது மாநாட்டுக்கும், பேரணிக்கும் மெருகூட்டியது. பெண்களும், இளைஞர்களும், மார்க்க அறிஞர்களும் பெரும் திரளாக ஆவேசத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கண்டன மாநாட்டை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் முன்னாள் தேசிய செயலாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான இ.அபூபக்கர் துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை தாங்கினார். பேராசிரியர் எஸ்.ஏ.ஆ.கிலானி(டெல்லி பல்கலைக்கழகம்), ஒ.எம்.அப்துல் ஸலாம்(பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தேசிய பொதுச் செயலாளர்), எ.ஸயீத்(எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர்), பேராசிரியர் ஜக்மோகன் சிங்(சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்


டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.ஏ.ஆர் கிலானி  தனது உரையில் கூறியது:மக்களை பீதியில் ஆழ்த்தி, வாயை அடைப்பதற்கு கறுப்புச் சட்டங்களை அதிகார வர்க்கம் மேற்கொள்கிறது. ஆனால், ஒரு குடிமகனை கொல்ல முடிந்தாலும், அவனது மன உறுதியை குலைப்பதற்கு யாராலும்முடியாது.யு.ஏ.பி.ஏ சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களும், தலித்துகளும், பழங்குடி மக்களும் ஆவர்.நீதி மறுக்கப்படும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் போராடவேண்டியது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை தொடர்பான கடமையாகும். அடக்குமுறையாளர்கள் எப்பொழுதுமே ஆட்சியாளர்கள்தாம். ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். தொடர் போராட்டங்களின் மூலமே உரிமைகளை பெற முடியும். நமது முன்னோர் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக மட்டுமே போராடவேண்டி இருந்தது. ஆனால், இன்று நாட்டை ஆக்கிரமிக்கும் நூற்றுக்கணக்கான கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு எஸ்.ஏ.ஆர்.கிலானி கூறினார்.

எ.ஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான இ.அபூபக்கர் தனது உரையில்   முஸ்லிம்களின் தலை ஒரு போதும் படைத்த இறைவனை தவிர வேறு யாருக்கும் தலை வணங்காது.காசர்கோடில் ஆரம்பம் செய்த இந்த பேரணி காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலா நடத்திய போல பதவிக்காக ஆரம்பம் செய்த யாத்திரை இல்லை அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யகோரி நடைபெற்ற பேரணி ஆகும் .UAPA வில் 100 அடைக்கப்பட்டுள்ளனர் அதில் 92 பேர் முஸ்லிம்கள்.இந்த சட்டம் முஸ்லிம்களுக்காக  உருவாக்கப்பட்டது காரணம் இது தடா,பொடாவை காட்டலும் மிகவும் கொடூரமானதுஆகையால் உடனே அப்பாவி இந்த கருப்பு சட்டத்தை அரசு உடனே தலையிட்டு நீக்க வேண்டும் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறினார்.இறுதியில் அப்பாவி முஸ்லிம்கள் எவ்வாறு பொய்யாக சிறையில் அடைக்கபடுகின்றனர்என்பதை குறிக்கும் நாடகம் நடத்தப்பட்டது