டெஹ்ரான்:கச்சா எண்ணெய் ஏற்றுமதி இல்லாவிட்டாலும் ஈரானுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற இயலும் என்று அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் தடையை கண்டித்து கிரீஸ் நாட்டிற்கு எண்ணெய் ஏற்றுமதிச்செய்வதை செவ்வாய்க்கிழமை ஈரான் நிறுத்தியது. பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திவிட்டு தடைக்கு பதில் தடையை விதிப்போம் என்று கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.