நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 11 ஏப்ரல், 2012

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!


சென்னை : இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
 Tsunami
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானதால் நிலநடுக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.
இதன் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,உதகை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அண்ணாசாலை,மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து  வீடுகளை விட்டு வெளியேறினர்.
Earthquake hits Indonesia
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு  வெளியேறினர்.
Indonesia issued a tsunami warning after a huge 8.9 magnitude earthquake off its westernmost province Aceh
கட்டிடங்கள் குலுங்கியதால் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தோர் பீதியடைந்து  வெளியே ஓடிவந்தனர். அதேப்போன்று ஊட்டியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனிடையே தமிழகம் தவிர்த்து இந்தியாவில் புவனேஸ்வர், கொல்கத்தா,டெல்லி மற்றும்  அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மலேசியா  உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தமான்   தீவுகளில் சுனாமி தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் உஷார் நிலையில் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் மாலை 4.30 மணிக்கும், சென்னையில் 5 மணிக்கு சுனாமி தாக்கலாம்?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.

யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். 
பாதிப்பு அதிகரிக்கும்?

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலினாலும் சென்னையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தோனேசியாவில் 2004 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டர் அளவுதான். அதற்கே அந்தமான், இலங்கை, தமிழ்நாட்டின் கடற்கரையோர லட்சக்கணக்கானோர் மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பொருளிழப்பு ஏற்பட்டது. கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

தற்போது 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருப்பதால், சுனாமியின் வேகம் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

புதுவையில் 4.30 மணிக்கு?

சென்னைக்கு முன்னதாக புதுச்சேரி, கடலூர் கடற்கரை பகுதிகளில் மாலை 4.30 மணிக்கு சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.