07-09-2012 அன்று மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலக கூட்டம் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் காலித் மற்றும் மாநில துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1950 யில் தமிழகத்தில் அமுலில் இருந்த வகுப்புரிமை ஆணையை எதிர்த்து செண்பகம் மற்றும் துரைராஜன் என்ற இரு மாணவர்கள் தங்களுக்கு கல்லூரியில் வகுப்புரிமை ஆணையினால் இடம் கிடைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது உயர் சாதியினருக்கு (பிராமணர்களுக்கு) மட்டுமே 14.29% இடஒதுக்கீடு அமுலில் இருந்த சமயத்தில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய சென்னை உயர் நீதி மன்றம் இவ்வழக்கை ஏற்று இரு மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் வகுப்புரிமை ஆணையையே ரத்து செய்தது.
அதன் விளைவாக மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடித்து அரசியல் சாசன சட்டத்தில் முதன் முறையாக இடஒதுக்கீட்டிற்காக சட்டம் வரையப்பட்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலீத் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் 88% மக்கட் தொகை கொண்ட தலீத் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின சமூகங்களுக்கு 69% இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த 69% சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே தொடரப்பட்ட விஜயன் வழக்கில் தமிழக அரசு சிறப்பாக வாதாடி, உச்ச நீதிமன்றமும் மாநிலத்தில் 69% இடஒதுக்கீடு வழங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும் பட்சத்தில் அதே மண்டல் கமிஷன் பரிந்துரையில் குறிப்பிட்ட விதிவிலக்கை பயன்படுத்தி கொள்ளலாம் என்று 2011 ஆம் ஆண்டு ஜீலை 13 ஆம் தேதியில் தீர்பளித்தது.அவ்வண்ணமே மாண்புமிகு தமிழக முதல்வர் பதவியேற்றதும் உடனடியாக மந்திரி சபையில் தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை தொடர்வது என்றும் தீர்மானம் எடுத்தது.
இந்நிலையில் காயத்திரி மற்றும் சில உயர் சாதி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டினால் தங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளார்கள். 14.29% இடஒதுக்கீடு வழங்கிய போதும் சில மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. எனவே ஒரு சில மாணவர்களுக்கு இடம் கிடைக்க வில்லை என்ற அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீட்டிற்கு எதிராக சிந்திக்க தேவையில்லை என்றும் நாட்டில் பெரும்பான்மை சமூகத்திற்கு எது பயன் தருமோ அந்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் வழங்கும் என்று பெரும்பான்மை சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமூக நீதிக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகம் இவ்வழக்கையும் வழக்கம் போல் மிகுந்த சிரத்தையுடன் எதிர்கொண்டு 69% இடஒதுக்கீட்டை தக்க வைக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் செயலக கூட்டம் கேட்டுகொள்கிறது.