நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ, ம.ம.க சாலை மறியல்!


சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜக தாக்குதலை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட  எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளத்தில் இன்று காலை அமைதியான வழியில் போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்திய காவல்துறையினரை கண்டித்தும், இடிந்தகரை பகுதியில் இருந்து
காவல்துறையினர் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும், போராட்டக் குழுவினரோடு முதல்வர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்தும் சென்னை மெமோரியல் ஹால் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேப்போன்று  மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் அதன் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதில் கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.