கடையநல்லூர்:- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி
17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் தாம்பரம், திருச்சி மற்றும்
நாகர்கோவில் ஆகிய இடங்களில் "யூனிட்டி மார்ச்" என்ற தலைப்பில் மாபெரும்
பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் 300
க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட
இடங்களில் மிகச்சிறப்பாக கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கடையநல்லூரில் மலம்பேட்டை ரோடு-பேட்டை, இக்பால்நகர்,மணிக்கூண்டு ஆகிய 3
இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மலம்பேட்டை ரோடு பகுதியில் நகர செயலாளர் செய்யது அலி கொடியேற்றிய போது
இக்பால் நகரில் கொடியேற்றிய போது
மணிக்கூண்டு அருகே மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் கொடியேற்றிய போது