புதுடெல்லி : குஜராத்தில் முதல்வரைக் கடந்து ஆளுநர் லோகயுக்தா சட்டத்தை அமுல்படுத்தியதில் தவறில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டப்படி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மட்டும் ஆளுநர் கலந்தாலோசனை செய்தால் போதுமானது என்று சட்டத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் கூறினார்.
குஜராத்தில் முதல்வருடன் கலந்தாலோசிக்காது லோகாயுக்தா சட்டத்தை அமுல்படுத்தியதற்கு பா.ஜ.க. பாராளுமன்றத்தில் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஸல்மான் குர்ஷித் மேற்கண்டவாறு பதிலளித்தார்.