காஷ்மீரில் வந்து போராட்டம் செய்யும்படி அன்னாவுக்கு காஷ்மீர் மிதவாத ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வியாஸ் பரூக் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் மனித உரிமை கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத 2 ஆயிரம் பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையிடம் விசாரித்தபோது, அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளனர்’ என்று கூறியிருந்தது. இதை சுட்டிக்காட்டிய மிர்வியாஸ், ‘அ‘னா எங்களின் கோரிக்கையை ஏற்று, இப்படி அப்பாவிகள் கொல்லப்படுவதை தட்டிக்கேட்க எங்களுடன் போராட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.