நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

காயல்பட்டினத்தில் காவல்துறை கபளீகரம்!!!



காயல்பட்டினத்தில் காவல்துறையின் காட்டு தர்பார். ஆம் கடந்த 1993 ம் ஆண்டு நமதூர் காயல்பட்டினம் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் போது காவல்துறையின் மோசமான நடவடிக்கைகளை கண்டித்து பத்திரிக்கைகள் மேற்கண்ட தலைப்பிட்டு சித்தரித்தன. அதே ரீதியில் இன்று ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு பார்த்திபன் காயல்பட்டின மக்கள்மீது தனது பாசிச நடவடிக்கைகளாலும், துவேஷ போக்காலும் பத்திரிக்கைகளில் மேற்படி தலைப்பை மீண்டும் வரவழைக்கவே திட்டமிடுகிறார் போல தெரிகிறது.






முஸ்லிம்கள் அமைதியாக வணங்கங்களில் மட்டும் ஈடுபட்டு வரும் இந்த ரமழான் காலங்களில் கூட, காயல்பட்டின நகரின் அமைதியையும், மக்களின் நிம்மதியையும் தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டேயிருக்கிறார் இந்த பார்த்திபன். சட்ட ஒழுங்கை காப்பாற்ற சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டு போலிஸ் வேலைக்கு வந்துள்ள இவர், மக்களிடையே மத துவேஷத்தை கிளப்பிவிடுவதோடு, நகரில் நடைபெரும் சிறு விஷயத்தைக் கூட பெரிதுபடுத்தி பதட்டமாக்குகிறார். இந்த காவல்துறை அதிகாரி பார்த்திபன் யார்? இவரை பின்னிருந்து இயக்குவது யார்? இவர் செய்யும் அட்டகாசங்கள் மேலதிகாரிகளுக்கு தெரியுமா? இவருக்கு என்னதான் வேண்டுமாம்? என்று மக்கள் கொந்தளித்துக் கொண்டுள்ளனர்.


 நடந்தது என்ன?


 காயல்பட்டினத்தில் சமூக நல்லிணக்க மையம் என்ற நமது தஃவா சென்டர் கடந்த 15 வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதை நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை கல்வி கற்க விருப்பமுடன் வருகை தருவோருக்கு அலியார்தெருவின் தென்கோடியில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக இருப்பிடங்கள் அமைத்து சிறந்த முறையில் மார்க்கக்கல்வி போதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை திருவள்ளுரைச் சார்ந்த ஆயிஷா சித்தீக்கா (22) என்ற சகோதரி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு கல்வி கற்பதற்காக நமது தஃவா சென்டரை அனுகினார். சகோதரி அவர்கள் சென்னை தமுமுக தலைமை கழகத்தின் வழிகாட்டுதலின் மூலம், பொருப்பாளர்கள் ஒப்புதலோடு தன்னுடைய முழுமையான விருப்பத்தின் அடிப்படையில் நமது சென்டரில் நல்ல முறையில் படித்து வருகிறார் - அல்ஹம்துலில்லாஹ்.

விடுவாரா இந்த பார்த்திபன்? புதிதாக ஒரு சகோதரி இஸ்லாத்திற்கு வந்துள்ளதை மோப்பம் பிடித்தாரோ என்னவோ, கடந்த 26-08-2011 அன்று வெள்ளிக் கிழமை நமது தஃவா சென்டர் மகளிர் பகுதிக்குள் ஒரு பெண் போலிஸ் துணையுடன் திடுதிப்பென அத்துமீறி புகுந்துள்ளார். என்ன ஸார் விஷயம்? என்ற விசாரித்த தஃவா சென்டர் நிர்வாகிகளை தனக்கே உரித்தான பாணியில் உங்கள் மீது FIR போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். சகோதரி ஆயிஷா சித்தீக்காக்காவை கடத்தியா வைத்துள்ளீர்கள் என்று அதட்டியுள்ளார்.

இப்படி நிகழ்வுகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, அழைத்து வரப்பட்ட பெண்போலிஸ் கான்ஸ்டபில் ஃபர்தா அணிந்திருந்த பள்ளி மாணவிகளை தரைக்குறைவாக பேசியுள்ளார். நீங்கள் முஸ்லிமாவதற்கு முன்னர் ஃபர்தாவாடி போட்டிருந்தீங்க என்று ஆரம்பித்து பார்த்திபன் பாணியில் அனைத்தையும் பேசி முடித்துள்ளார்.

வேறு வழியில்லாமல் தஃவா சென்டர் நிர்வாகிகள் சகோதரி விருப்பப்பட்டால் நீங்கள் தாராளமாக அழைத்துச்சென்று விசாரிக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் சகோதரி ஆயிஷா சித்தீக்கா இஸ்லாமிய அடிப்படை கல்வியை படித்து முடிக்காமல் எவருடனும் செல்வதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் வயதிற்கு வந்த மேஜர் என்றும் இஸ்லாத்தை தாம் சிந்தித்து முழுவிருப்பமுடனேயே ஏற்றுக்கொண்டதாகவும் காவல்துறை ஆய்வாளர் பார்த்திபனிடம் அனைவரின் முன்னலையில் தெரிவித்துள்ளார்.

இவைகளையெல்லாம் சற்றும் செவிமடுக்காத இந்த பார்த்திபன் பெண் காவல் துறையினர் மூலம் சகோதரியின் கையை பிடித்து தரதரவென இழுத்து போலிஸ் வண்டியில் ஏற்றிச்சென்று ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சகோதரியிடம் போலிஸ் ஸ்டேஷனில் வைத்து அவரது ஈமானை நிலைகுலையச் செய்யும் விதத்திலும் பேசி அவர் பெற்றோருடன் போவதற்கு நிர்பந்தித்திருக்கிறார்.

தொடர்ந்து இஸ்லாத்தில் தன் மன உறுதியை காட்டியிருக்கிறார் சகோதரி ஆயிஷா சித்திக்கா. கடுப்பாகிபோன பார்த்திபனோ சகோதரி அவர்களை அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைப்பதாகவும், தஃவா சென்டருக்கு அனுப்பமுடியாது என்றும் மிரட்டல் தொனியில் பேசி நிர்வாகிகளை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்து (28-08-2011 இன்றோடு) சுமார் 2 நாட்கள் ஆகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சகோதரி அவர்கள் பார்த்திபன் எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பதைக்கூட சொல்ல மறுக்கிறார். 

சகோதரி ஆயிஷா சித்தீக்காவிற்கு நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளையும், காவல்துறை அதிகாரி பார்த்திபன் அவர்களின் ஓரவஞ்சனை போக்கையும் கண்டு காயல்பட்டினம் பொதுமக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

தஃவா சென்டர் நிர்வாகிகள் நோன்பு காலத்தையும் பெருட்படுத்தாது இதுவிஷயமாக அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

சகோதரி ஆயிஷா சித்தீக்கா நலமுடன் பள்ளி திரும்பவும், பாசிச வெறிபிடித்த பார்த்திபனின் தொடர் டார்ச்சர்களைவிட்டு காயல்பட்டினம் தஃவா சென்டர் முழு அமைதி பெறவும் இந்த சங்கைமிகு ரமழானில் அதிகம் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திரு பார்த்திபன் நமது தஃவா சென்டரை குறிவைப்பது இது முதல் முறையல்ல. கடந்த வருடம் மின்னல் மீனா என்ற அரவாணி கொலையை காரணம் காட்டி தஃவா சென்டர் மாணவர் பகுதிக்குள் சென்ற இதே பார்த்திபன், அங்கு சமையலறையில் வைக்கப்பட்டிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை கையில் எடுத்துக் கொண்டு இதை வைத்துதானே அந்த 9தை கொலை செய்தீர்கள் என்று மாணவர்களை மிரட்டியுள்ளார். புதிதாக இஸ்லாத்திற்கு வந்த சகோதரர்களின் வகுப்பறைக்குள் அத்துமீறி சென்று நீங்கள் அனைவரும் இங்கிருந்து ஓடிவிடுங்கள் இல்லையேல் அனைவரும் உள்ளே போக வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்த தகவலும் இன்றுதான் வெளியுலகிற்கு தெரியவந்தது.

எனவே ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு பார்த்திபன் அவர்களின் அதிகார பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வருமா?

தமிழக அரசு இந்த விஷயத்தில் சிறப்புக்கவனம் செலுத்தி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இவர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்யுமா? சகோதரி ஆயிஷா சித்தீக்காவிற்கு நீதி கிடைக்குமா? – பொருத்திருந்து பார்ப்போம்.

மேற்படி காவல்துறையின் அத்தமீறல் சம்பந்தமாக உங்கள் உணர்வுகளை கீழ்கண்ட Email மற்றும் FAX முகவரிகளுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Cheicf Minister's Special Cell, Email : cmcell@tn.gov.in இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் FAX : 044-25671441

IG Southern Zone : Email : igszone_2007@yahoo.com இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் , Fax : 0452-2522596

Tuticorin SP Mr. Narendra Nayar IPS, Email : spthoothukudi@yahoo.co.in இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

To Make online complaint against Parthiban : click here http://www.tnpolice.gov.in/mailcomplaint.php