நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 16 மார்ச், 2012

பாடபுத்தகங்கள் காவிமயமாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்


பெங்களூர்: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது. மாநில தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

காவிமயமாகி வரும் பாடபுத்தகங்கள்:

5 மற்றும் 8ஆம் வகுப்புக்களின் சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் காவிமயமாக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் மனதில் இனவாதத்தை தூண்டும் அளவிற்கு பாடங்கள் இயற்றப்பட்டுள்ளன. 


வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டு வன்முறையை தூண்டும் விதத்தில் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு இதனை வன்மையாக கண்டிப்பதோடு, இம்மாதிரியான பாட புத்தகங்களை தடை செய்ய வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

பள்ளி செல்வோம் பிரச்சாரம்:

ஒவ்வொரு வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் ஆகும். இப்பிரச்சாரத்தின் போது பள்ளிப்படிப்பை பாதியில் முடித்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்ச்சிகள் நடைபெறும். கல்வி உதவித்தொகைகள், இலவச நோட்டு புத்தகங்கள், போன்றவை வருகின்ற மே மாதம் ஏழை எளிய மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
பசு வதை தடைச்சட்டம்:

மாநில அரசு பசு வதை தடைச்சட்டத்தை அமுல்படுத்த முயற்ச்சித்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். இப்பேற்பட்ட சட்டங்கள் மக்களுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது. மாட்டிறைச்சியை முஸ்லிம்கள், தலித்கள், கிறிஸ்த்தவர்கள் மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் சாப்பிட்டு வருகிறார்கள். இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் விவசாயிகள் மற்றும் இறைச்சி விற்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே குடியரசு தலைவர் இதில் தலையிட்டு இப்பேற்பட்ட சட்டங்கள் இயற்றுவதிலிருந்து மாநில அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
முஸ்லிம்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மீது தாக்குதல்:

உடுப்பி மாவட்டம் கொங்கோலி மற்றும் கோடாவூர் பகுதிகளிலுள்ள மஸ்ஜிதுகள் மீது சங்கப்பரிவார கும்பல்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதேபோன்று கடலோர பகுதிகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற இடங்களில் சங்கப்பரிவார குண்டர்கள் முஸ்லிம்களை தாக்கியுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதனை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

ஒரு சார்புடைய ஊடகங்கள்:

ஊடகங்களின் ஒரு பிரிவினர் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதனை வன்மையாக கண்டிக்கிறது. பொய்யான செய்திகளை பரப்பி மக்களை பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக திசை திருப்ப முயற்ச்சித்து வருகின்றனர். விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலமாகவும், சமூக சேவைகளின் மூலமாகவும் முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்துவதற்கான பணிகளையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகாவில் மாற்று அரசியல் சக்தி தேவை:

கர்நாடக மாநில அரசியலில் ஒரு மாற்று அரசியல் சக்தி தேவை என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் போன்ற கட்சிகள் நல்லதொரு ஆட்சியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டன. மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதில் இவர்கள் போதுமான அக்கறை செலுத்தவில்லை. மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவது போன்ற‌வற்றில்தான் அதிகம் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மக்களை இதுபோன்ற கட்சிகளை வெறுக்க துவங்கியுள்ளனர். அவர்கள் இவர்களை விடுத்து ஒரு மாற்று அரசியல் சக்தியை எதிர்பார்கின்றனர். 

இவ்வாறு பொதுச்செயலாளர் ரியாஸ் பாஷா செய்தி வெளியிட்டுள்ளார்.