நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 14 மார்ச், 2012

அமீர் சுல்தான் மீது போடப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு!

சென்னை: எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மீது அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட பொய்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உடைபட்டது. ஓரிரு நாட்களில் இறைவன் அருளால் அமீர் சுல்தான் அவர்கள் விடுதலை அடைவார் என எஸ்.டி.பி.ஐயின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் தெரிவித்தார்.


எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக பொறுப்புவகித்து வந்தவர் அமீர் சுல்தான். துறைமுகம் தொகுதியில் பல சமூக நலப்பணிகளை மேற்கொண்டுவந்ததால் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் ஆதரவை நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இவர் ஆற்றிய சேவைகளால் எஸ்.டி.பி.ஐ கட்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்தனர். எம்.எல்.ஏவாக, கவுன்சிலராக இருந்து செய்ய வேண்டிய பணிகளை எந்த ஒரு அரசாங்க பொறுப்பு வகிக்காமலும், சுயநலமில்லாமலும் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வந்ததால் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அமீர் சுல்தான் மேல் பொறாமையும், காழ்புணர்ச்சியும் ஏற்பட்டது.


அதே சமயம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். அடியாட்கள் பலம், அரசியல் பலம், பண பலம் கொண்ட, பல வருடங்களுக்கு மேலாக அரசியல் கட்சியினை நடத்தி வரும் அரசியல்வாதிகளுக்கிடையே எந்த ஒரு பலமும் இல்லாமல் தான் செய்த சேவையின் மூலமாக மற்றவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு 1250 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்தார்.

இப்படி மக்கள் செல்வாக்கை பெற்றுவந்த அமீர் சுல்தானை எப்படியாயினும் சிறையில் அடைக்க வேண்டும் என்ற காழ்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகள் காவல்துறையினரின் துணையோடு கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று நள்ளிரவு அத்துமீறி வீடு புகுந்து அவரை கைது செய்தார் ஐஸ்ஹவுஸ் டி-4 காவல் நிலையத்தின் அதிகார் இராஜேந்திரன். கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் நயவஞ்சக எண்ணத்துடன் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து அமீர் சுல்தானை விடுவிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் கட்சியின் மேலிடம் மேற்கொண்டு வந்தது. கடந்த மாதம் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வாயிதா பெற்று வந்தார். மூன்றாவது முறையாக நீதிமன்றத்திற்கு வந்த இவ்வழக்கை எந்தவித காரணமும் இல்லாமல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இவ்வழக்கில் அமீர் சுல்தான் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அபுதாஹிரின் கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரால் பதிலளிக்க முடியாமல் போகவே நீதிபதி இவ்வழக்கை பொய் வழக்கு என்று கூறி டிஸ்மிஸ் செய்தார். ஓரிரு நாட்களில் அமீர் சுல்தான் விடுதலை பெற்று கட்சிப்பணிகளை மேற்கொள்வார்." இவ்வாறு பொதுச்செயலாளர் அப்துல் ரஷீத் தெரிவித்தார்.